Saturday, April 18, 2026

மின் படிக்கட்டிற்கு இதுவரை அனுமதி இல்லை! -டான்ஸ்ரீ நடராஜா ஆதங்கம்!!

பத்து மலை திருத்தளத்தில் மின் படிக்கட்டு அமைப்பதற்கு பிரதமரும் மந்திரி பெசாரும் அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதன் தொடர்பில் தேவஸ்தான நிர்வாகம் தயார் நிலையில் இருந்தாலும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

மின் படிக்கட்டு கட்டினால் முதியவர்கள் தாராளமாக மேலே சென்று முருகனை வழிபட்டு திரும்பலாம். நாங்களும் அனுமதி கொடுக்கக் கோரி பலமுறை கோரிக்கையை முன்வைத்து விட்டோம்.

ஆனால் இன்று வரை அனுமதி கிடைக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது. மின் படிக்கட்டு கட்டுவதற்கு அனுமதி கிடைத்தால் திட்டமிட்டபடி கட்டி முடிப்போம்.

இதன் தொடர்பில் தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் பல கட்டங்களில் சமர்ப்பித்து விட்டோம். வரும் தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இருப்பினும் பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் வாக்குறுதி என்னவானது என்றும் அவர் கேள்வியை எழுப்பினார்.

பக்தர்களின் நலன்களுக்காக பத்து மலையில் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3,000 பேர் அமரக் கூடிய பல்நோக்கு மண்டபம் கட்டும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இத் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

இந்நிலையில் தான் இவ்வாண்டு தொடக்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட பல அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தலைவர்கள் பத்துமலைக்கு வந்தனர்.

அப்போது இப் பிரச்சினைக்கு எல்லாம் விரைவில் தீர்வுக் காணப்படும்; அனுமதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார் என்று
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன், செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், அஸ்ட்ரோ நிறுவனத்தை சேர்ந்த ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை