
இலக்கியம் பேசும் அரசியல்வாதி, அரசியல் பேசும் இலக்கியவாதி, சொல்வேந்தர், சிறப்பு முனைவர் பட்டம்(டாக்டர்), கண்ணதாசன் அறவாரியத் தலைவர், கம்பன் புகழ்பாடி எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணை வேந்தர் என்றெல்லாம் ஏராளமான பட்டங்களுடன் திகழும் சரவணன் இப்பொழுது புதிதாக ‘வாழும் வழிகாட்டி’ என்னும் விருதை, அதுவும் பூர்வீக மண்ணில் பெற்றிருக்கிறார்.
ஏற்றத்தாழ்வும் விமர்சனமும் இருந்தாலும்கூட மலேசிய இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் அரசியல் அடைக்கலம் மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா-என்பது, மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய மஇகாவின் மட்டுமல்ல;, மலேசிய,த் தமிழர்களின் பன்னாட்டு அடையாளமாகவும் விளங்குகின்ற டத்தூஸ்ரீ டாக்டர் மு சரவணனின் அரசியல்- பொதுவாழ்வுப் பயணத்தில் இப்பொழுது இன்னொரு சிறப்பு சேர்ந்திருக்கிறது

தமிழ் நாடு, கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி கல்லூரி அரங்கத்தில்
‘ஆத்மயோகா’ அறக்கட்டளை சார்பில் ‘மாறுவோம் முன்னேறுவோம்’ என்கிற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏறக்குறைய 1,800 பேர் பங்கேற்ற இந்நிகழ்வில், மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணனுக்கு ‘வாழும் வழிகாட்டி’ என்ற உயரிய விருதை ஆசான்ஜி வழங்கினார்.

சரவணன் ஆற்றிவரும் மனித நேய சேவை , தொடர் இலக்கியப்பணி, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பு , 10 ஆண்டுகள் துணை அமைச்சர், தோடராந்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது மொழி ,மதம், இனம் கடந்த ஆற்றிய மக்கள் நலப் பணி மற்றும் கடல் கடந்த அவரது எண்ணற்ற சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் தேர்வு செய்யப் பட்டதாக ஆசான்ஜி கூறினார்.
மொத்தம் 12 ஆளுமையரைதா தேரிவுசெய்து, அதில் எல்லா நிலையிலும் தகுதி மிகப்பெற்ற மாபெரும் தலைவராக மதிப்பு மிகு டத்தோஸ்ரீ சரவணன் தெரிவு செய்யப்பட்டார் என்று ஆசான்ஜி, சரவணனுக்கான பாராட்டுறையில் குறிப்பிட்டார்.
அதிகாரங்களைத் தன் தலைக்கு ஏற்றாமல் எளிய மக்களும் தன்னை அணுகக் கூடியவராக மலேசியாவில் இருக்கும் ஒரு மாபெரும் ஆளுமைமிக்க தலைவராகத் திகழ்கிறார் டத்தோஸ்ரீ சரவணன் என்று மேலும் புகழாரம் சூட்டினார்.
இவரது வாழ்வும் சொல்லும் இன்றைய இளைய தலைமுறையினரின் முனேற்றத்திற்கு வழிகாட்டியாக இருப்பதினால் “வாழும் வழிகாட்டி” என்ற இந்த உயரிய விருதுக்கு மிகத் தகுதியானவர் சரவணன் என்று ஆசான்ஜி தன்னுரையில் குறிப்பிட்டார்.
விழா அரங்கில் கூடியிருந்த அனைவரின் ஒருமித்த பலத்த கரவொலியோடு விருது வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.


