
காலமென்னும் வீதியிலே 365 இதழ்களுடன் இன்று 2026 என்னும் பெயருடன் மலர்ந்துள்ள உன்னை, கால மலரென்பதா அல்லது கால மகளென்பதாவென்று தெரியவில்லை.
ஆனாலும், இன்று முதல் 12 திங்களுக்கு எங்களை கட்டாயம் ஆட்கொள்ளப் போகும் உன்னை வருகவருகவென குமரி நல்லாள் வரவேற்கிறாள் வேறு வழியின்றி!.
இப்பொழுதெல்லாம் நீ, நன்மையைவிட தீமையைத்தான் அதிகமாக பரிசளிக்கிறாய். ஒவ்வொரு இதழாக நீ, தரைதொடும்பொழுது, ஒரு நாளில் அதிகமாக உலர வைக்கிறாய்; அடுத்த நாளே, தாங்கவொண்ணா அளவிற்கு நனைய வைக்கிறாய்.
பிரிதொரு நாளில் திடீரென நலத்தைப் பிளக்கிறாய்; போதாதற்கு, கடல் நீரடியிலும் நிலத்தைப் பிளந்து, அதை சாக்காக வைத்து கடல் நீரை பொங்க வைத்து, மனிதக் குஞ்சுகளை மூச்சடைக்க வைக்கிறாய்.
காற்றையும் விட்டு வைக்காமல், எங்கள்மீது சுழலவைத்து ஏவ வைக்கிறாய்; மிரட்சியாக இருக்கிறது உன்னைக் காண; அதனால், உன்னுடன் கைகுலுக்க சிறிது அச்சமாகத்தான் இருக்கிறது;, சற்றே தள்ளிநின்று வணக்கம் தெரிவிக்கிறோம்.
நேற்றுடன் முடிந்துபோன உன் பழைய அத்தியாயத்தைக் காட்டிலும் இன்றைய புது அத்தியாயத்தில் மானுடக் குலத்திற்கு அதிக நன்மையை அளிப்பாய் என்ற நம்பிக்கையுடன் உன்னை அண்டி நிற்க தலைப்படுகிறோம்.
நல்ல வண்ணம் எங்களை அரவணைப்பாய் என்ற நம்பிக்கையும் மனதின் ஓரத்தில் துளிர்விடுகிறது, நீ தாயாகவும் இருப்பதால்!
இன்று, ஜனவரித் திங்கள் முதல் நாள், கிரிகொரியின் நாட்காட்டியின்படி ஆண்டின் தொடக்க தினம்.
பழைய ஐரோப்பிய மண்டலத்தில், கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதிக்கம் நிறைந்த நடுக்காலப் பகுதியில், குறிப்பாக மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் தொடக்க நாளாக ஏசு பிரானின் பிறப்பையும் உயிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு, முதலில் டிசம்பர் 25, பின்னர் மார்ச்சு 1, அதன்பின் மார்ச்சு 25 ஆகிய நாட்களை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டிருந்தன.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளோ மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றி செப்டம்பர் முதல் நாளை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டிருந்தன. உலகைக் கட்டியாண்ட இங்கிலாந்தோ மார்ச் 25-ஐ ஆண்டின் தொடக்கமாக 12ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை கடைப்பிடித்தது.
இந்தச் சூழலில், ஸ்கோட்லாந்து 1600 இல் ஜனவரி 1-ஆம் நாளை, புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. தொடர்ந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் இங்கிலாந்து குடியேற்ற நாடுகள் ‘1750 நாட்காட்டிச் சட்டத்தின்படி, ஜனவரி முதல் நாளையே புத்தாண்டு தினமாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி கடைப்பிடிக்கத் தொடங்கின. 1752-இல் பரந்த அளவில் நடைமுறைக்கு வந்த இந்த கிரிகேரியன் ஆண்டு முறையின்படித்தான் இன்று 2026-ஆம் ஆண்டும் தொடங்குகிறது.

இதேக் காலக்கட்டத்தில் படை வலிமையோடு தனி அரசு நடத்திவந்த தமிழர்களுக்கு ஏன் ஆண்டுக் கணக்கு முறை இல்லாமல் போனது என்பதற்கு பல காரணங்கள் உண்டு.
ஒவ்வொரு மன்னரும் ஆட்சிக்கு வந்தபொழுது, பதவியேற்ற ஆண்டைக் கொண்டு புத்தாண்டுக் கணக்கைத் தொடங்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இதனால், தொடர் ஆண்டுக் கணக்கு முறை இல்லாமல் போனது.
சோழ மண்டலத்தில் ஒரு கணக்கு முறை என்றால், பாண்டிய நாட்டில் வேறு ஆண்டுக் கணக்கு நடைமுறையில் இருந்தது; சேர நாட்டிலும் அதாவது இன்றைய கேரள தேசத்திலும் அப்படித்தான் நிலைமை இருந்தது.
இப்படிப்பட்ட குளறுபடியான நிலையில், அடுத்தடுத்து, தமிழ் நிலத்தை நீண்ட காலமாக தமிழர் ஆளாத நிலையில், தமிழும் ஆட்சிமொழியாக இல்லாத நிலையில், தமிழரின் நேர் எதிரியான பார்ப்பண சண்டாளக் கூட்டம், வைணவ சமயத்திற்கே உரிய ஆபாசக் கதைகளில் ஒன்றான கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து ஆணும் ஆணுமாக நடத்திய காமக் களியாட்டத்தின் விளைவாக 60 பிள்ளைகள் 60 ஆண்டுகளில் பிறந்ததாகவும் அதில் 39-ஆவது பிள்ளையின் பெயரான ‘விசுவாவசு’-தான் இப்பொழுது தமிழனுக்குரிய ஆண்டின் பெயரெனவும் இந்த விசுவாவசு இன்னும் 59 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருவான் அல்லது வருவாள் என்ற இழிச் சரித்திரமும் தமிழனின் மண்டையில் திணிக்கப்பட்டுள்ளது.
இந்த விசுவாவசு, ஆணா, பெண்ணா அல்லது திருநங்கையா, அல்லது திருநம்பியா என்ற விவரம் சொல்லப்படவில்லை.
ஆனாலும், வெட்கங்கெட்டத் தனமாக, சொரணையற்ற நிலையில் தமிழர்களே இதை தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்றுக் கொண்டிருப்பதுதான் கேவலம்; பெருங்கேவலம்.
அதிருக்கட்டும், இன்று நடிகை கி.சுஜாதாவிற்கு பிறந்த நாள் தெரியுங்களா?

ஓரு காலத்தில் தமிழ் நாளேடுகளின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருந்த அதே சின்னத்திரை தாரகைதான் இந்த சுஜாதா!
1979-இல் பிறந்த இவர், மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்; சுஜாதா என்பதை இயற்பெயராகக் கொண்ட இவர் நடித்த கடைசிப் படம் நூர்ஹாலிசா’ எனும் மலாய்ப் படமாகும். முதலில் பாடகியாகத்தான் மலேசிய கலை உலகில் இவர் அறிமுகமானார். பின்னர், பல தொலைக்காட்சி திரைப்படங்கள், தொடர் நாடகங்களில் நடித்தார். உள்ளூர் விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்படிப்பட்ட இவர், 2007 ஜூன் 25-ஆம் நாள் பாராகுவாட் எனும் களைக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 29. இறப்பதற்கு முன்னர், இந்த சின்னத்திரை தாரகை ‘மைக்கா ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வேள்பாரியின் தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார்.
சுஜாதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக அப்போதைய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த மக்கள் நீதிக்கட்சி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
கேமரன் மலை, ரிங்லெட் நகரில் பிறந்த சுஜாதா, பள்ளி பருவத்திலேயே பாட்டுத் திறனைப் பெற்றுருந்தார். மேல்படிப்பிற்காக கோலாலம்பூருக்கு வந்தபோது, மலேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தனியார் நிறுவனங்களின் விளம்பர படங்களிலும் நடித்தார். மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார்.
இந்தக் காலகட்டத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தின் அன்றைய தானைத் தலைவர் துன் ச. சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரியின் நட்பு கிடைத்து, மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிருவாகியாக இருந்த வேள்பாரிக்கு தனிச் செயலராக 1999 முதல் 2007வரை பணியாற்றினார், சுஜாதா.
இந்த நிலையில், 2007 ஜூன் 21-இல் அவர் பாராகுவாட் எனும் களைக் கொல்லி மருந்தை அருந்தியதால், கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; நான்கு நாட்கள் கழித்து 2007 ஜூன் 25இல் காலமானார்.
மலேசியத் திரைபட நடிகையாக இருந்து புகழ் பெற்றதைக் காட்டிலும், அவருடைய இறப்பிற்குப் பின்னர்தான் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அவருடைய இறப்பைப் பற்றிய விசாரணை மலேசிய நீதிமன்றங்களில் நடைபெற்றபோது, முடிவை அறிந்து கொள்ள மலேசியர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
மலேசிய நாடாளுமன்றத் தொகுதிகளில் மிகப் பெரிய தொகுதியான காப்பார் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக எஸ். மாணிக்கவாசகம் 2008 மார்ச்ச் 08, 12-ஆவது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்று மாதங்களுக்கு முன் நாட்டை அதிர வைத்த ஹிண்ட்ராஃப் எழுச்சி, இதற்கு அடித்தளம் அமைத்ததால், மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா-வின் அந்த பாரம்பரியத் தொகுதியில் டத்தின் பாதுகா கோமளா கிருஷ்ணமூர்த்தி மாணிக்கவாசகத்திடம் தோற்றார்.
அப்படித் தேர்வான இந்த மாணிக்கவாசகம், தொகுதி மக்களுக்கு சேவை ஆற்றுவதைக் காட்டிலும் தனிப்பட்ட முறையில் சுஜாதா மரண விவகாரத்தில் அக்கறைக் காட்டியதுதான் அதிகம்; ஐந்தாண்டு தவணை அதிலேயே கழிந்தது.
சுஜாதாவின் இறப்பிற்கும் வேள்பாரிக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் 4 இலட்சத்து 20ஆயிர வெள்ளி செலவில் சுஜாதா வாங்கிய சொகுசு வீட்டிற்கு, வேள்பாரி 2இலட்ச வெள்ளி அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும் தவிர 229,095 வெள்ளி மதிப்புள்ள ’மாஸ்டா ஆர்.எக்ஸ் 8’ ரக ஆடம்பர மகிழுந்தை வாங்கிக் கொடுத்ததாகவும் மாணிக்கவாசகம் நேரடியாக குற்றம் சாட்டினார். நதிமன்ற விசாரணையில் அது உறுதியானாலும் அந்தக் குற்றச்சாட்டுகளை
வேள்பாரி மறுத்தார்.
சுஜாதாவின் மரண விசாரணை 2009 மார்ச் 16-இல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது; 2009 ஜூலை 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மரண விசாரணையில் 23 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களில் செந்தூல் காவல் நிலைய அதிகாரி ஏ.எஸ்.பி. ஜில்கிப்ளி ஃபஜாரும் ஒருவர்.
2009 செப்டம்பர் 29இல் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சுஜாதாவின் மரணத்தில் எவ்வித சூதும் நடைபெறவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டது உண்மை என தீர்ப்பு வழங்கியது. அத்துடன் சுஜாதாவின் மரணத்தில் இருந்த மர்மமும் ஐயமும் முற்றுபெற்றன.

2009 மே 18 முதல் முல்லி வாய்க்காலில் நிலைகுத்தி நிற்கும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கேப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தனுக்கு நிரந்தர-சிறப்பான இடம் உண்டு.
அவருக்கும் இன்று பிறந்த நாள்(1966). 21 ஆண்டுகளே வாழ்ந்த இந்த வீரத் தமிழ் ம்கன் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும் முதலாவது கரும்புலியும் ஆவார்.
இவர், 1987 ஜூலை 5-ஆம் நாளில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய கலாச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீது மேற்கொண்ட சமரின்போது வீர மரணமடைந்தார்.
மில்லர் முதலாவது கரும்புலியாகவும் புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார்.

கோடம்பாக்க வட்டத்தில், நெஞ்சு வலி ஏற்பட்டு துடிப்பதாக நடிப்பதில் மேஜர் சுந்தரராஜனை அடுத்து மிகச் சிறப்பாக நடித்தவர் வி.எஸ்.ராகவன். அவருக்கும் இன்று பிறந்த நாள்(1925).
இம்மூவருமே நினைவில் வாழ்கின்றனர்.


