Tuesday, April 21, 2026

உலகத் தமிழர்களை பொங்கல் வேளையில் சந்திப்பது மகிழ்ச்சி! -துணை முதல்வர் உதய நிதி பெருமிதம்!!

(சென்னையில் இருந்து வேதா)

தைத்திங்கள் முதல் நாளில் கொண்டாடப்படும் தமிழர்தம் பாரம்பரிய பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் காலத்தில் அயலகத் தமிழர் தின மாநாடு நடைபெறுவது சிறப்பானது. இந்த இனிய வேளையில் உலகத் தமிழர் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி யானது என்று தமிழ் நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ் மொழி உலகின் சிறந்த மொழி மட்டுமல்ல; உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை ஒருங்கிணைக்கும் உயிர் வளையமாக தமிழ் மொழி திகழ்கிறது.

உலகளாவிய நிலையில் தமிழர்கள் தற்பொழுது மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் உரையாற்றிய பொழுது பெருமிதம் கொண்டார்.

தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஆளப் போனவர்கள் என்பதால் அவர்கள் அயலகத்தினர் அழைக்கப்படுகின்றர்.
அதேவேளை மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள ரப்பர் கரும்பு செம்பனைத் தோட்டங்களில் உயிரைக் கொடுத்து வேலை செய்யும் பாட்டாளியராகவும் விலங்கினர்

காவேரி இருந்தென்ன, நஞ்சையும் புஞ்சையும் இங்கு இருந்தென்ன?;

நாங்கள் வாழ வழியில்லையே என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.

கயிற்றில் தொங்கிய கணபதி என்று கலைஞர் மு. கருணாநிதி கூறினார். குரு நாடகமும் இயற்றினார்.

இப்படியெல்லாம் எண்ணற்ற வரலாறுத் தொடர்பு, தமிழகத் தமிழர்களுக்கும் அயலக தமிழர்களுக்கும் இடையே உண்டு.

டோனால்ட் டிராம்ப் இரண்டாவது தவணை அதிபராக வந்த பிறகு அமெரிககாவில் வாழ்வதற்கே பயமாக உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அயலகத் தமிழர்களை கை விட மாட்டோம் என்று தமிழ்நாட்டின் நீண்டகால அரசியல்வாதியும் மூத்த தலைவருமான துரைமுருகன் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்று கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுவாலானா பேசிய பொழுது தமிழ்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தார்

தமிழ்நாட்டு அரசு நான்காவது முறையாக ஏற்பாடு செய்துள்ள அயலகத் தமிழர் நாள் விழா-2026 உலகத் தமிழர்களின் பெரும் ஒன்றுகூடலுடன் இன்று தொடங்கி இதை எழுசியுடன் நாளையும் தொடர்கிறது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தமிழர் நாகரிகம், அறிவுசார்மரபு, உயிரணைய தாய் மொழியாம் செம்மொழி ஆகியவற்றை காலம் காலமாக கட்டிக் காத்துவரும் தமிழர்தம் தொன்மைமிகு சிறப்பைக் கொண்டாடும் விழாவாக இன்றைய விழா சென்னையில் மலர்ந்துள்ளது.

‘திராவிட வேந்தர்’, மு க ஸ்டாலின் தலைமையில் காலையில் தொடங்கிய இந்த விழாவில் மலேசியாவில்
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிருவாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற முன்னாள் துணை அவைத் தலைவரும் போர்ட்டிக்சன் சட்டமன்ற மேனாள் உறுப்பினருமான டத்தோ ரவி, மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி சாசா, ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி, பினாங்கு மாநில கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் டத்தோ பால நம்பியார், பூச்சோங் முரளி உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர்தம் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளுடன் இந்த
மாநாடு இனிதே காலையில் தொடங்கியது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை