
இந்தியாவின் நாசகார கட்சி, அரசியல் துரோகத்தின் மொத்த வடிவம், சுயநல மூட்டை, நன்றி என்னும் சொல்லை அறவே அறியாத இழிகுணம் கொண்ட கட்சி, காங்கிரஸ்.
மூன்று பொதுத் தேர்தல்களில் புது டில்லி கோட்டை வாசலிலேயே நிற்கின்ற இந்தக் கட்சி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, பீகார், ஒரிசா போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சிக்கு அதிகாரம் கையருகில் வந்த பொழுதும் அதை கையகப்படுத்த துப்பு இல்லாத காங்கிரஸ் கட்சி, இப்பொழுது நாட்டின் தென்கோடி முனையாம் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திமுக கட்சியையும் அரசையும் சூறையாடப் பார்க்கிறது.
இந்திரா காந்தி எவ்வழியோ அவ்வழியே செயல்பட்ட ராஜீவ் காந்தியின் பாதையில் ராகுலும் பயணிக்கிறார்.

தமிழ்நாட்டில் சில சில்லறைகளை ஏவி விட்டு டெல்லியிலும் வெளிநாட்டிலும் பயணம் மேற்கொண்டு கள்ள மௌனம் காக்கிற ராகுல் காந்தி வஞ்சகத்தின் மொத்த வடிவமாக இருக்கிறார்.
லால் பகதூர் சாஸ்திரி டாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற பொழுது அவர் மர்மமான முறையில் மறைந்தார்.
அந்த சூழ்நிலையில் அடுத்து பிரதமராக வரவேண்டிய மொரார்ஜி தேசாயை தடுத்து நிறுத்தி அந்தநேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளராக இருந்த காமராஜர் தான் இந்திரா காந்தியை நாட்டின் பிரதமர் ஆக்கினார்.
பின்னாளில் அதே இந்திரா காந்தி, காமராஜரை கைது செய்யும்படி கலைஞரை வற்புறுத்தினார்.
1969-இல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி, திமுகவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதரவை சிந்தாமல் சிதறாமல் நாஞ்சில் மனோகரன் தலைமையில் வழங்கி அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.

பின்னர் அதே இந்திரா காந்தி கலைஞருக்கு செய்த துரோகமும் வஞ்சகமும் சொல்லி மாளாது.
எம்ஜிஆரை ஏவி விட்டு, திமுகவில் இருந்து பிரியும்படி கட்டாயப்படுத்தினார்.
உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பின் கடைசிகா கட்ட பணியில் காஷ்மீரில் இருந்த எம்ஜிஆர்-ஐ மோகன் குமாரமங்கலத்தின் மூலம் மிரட்டி அந்நிய செலாவணி கணக்கு காட்டப்படாததால் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிய வராது என்று மிரட்டி திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரித்தவர் இந்திரா காந்தி.
காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாமல் வஞ்சகம் செய்து இன்று தமிழகம் வறண்ட பூமியாக மாறி வருவதற்கு முழு முதல் காரணம் இந்திரா காந்தி.
ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் மைசூர் மாகாணத்திற்கு கிருஷ்ணராஜ சாகர் அணையும் சென்னை மாகாணத்துக்கு மேட்டூர் அணையும் என இரு அணைகளையும் ஒரே நேரத்தில் 1924-இல் திறந்து வைத்த ஆங்கிலேய நிர்வாகம், 50 ஆண்டுகளுக்கு அடுத்து அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும்படி மிகவும் சரியாக இரு மாகாணங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தத்தை மிகவும் சீராக வரைந்தது.

50 ஆண்டுகள் கழித்து மக்கள் தொகைப் பெருக்கம், இரு மாநிலங்களில் நிலவும் பாசன பரப்பு மழையின் அளவு இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு 1974-இல் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிலையில் அப்பொழுது கர்நாடக மாநிலத்தை ஆண்டு கொண்டு இருந்த இந்திரா காந்தியின் கையாளான அம்மாநில முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் காலம் கடத்திக் கொண்டே வந்தார்.
பொறுத்து பொறுத்துப் பார்த்த கலைஞர் மு கருணாநிதி புதுடில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அப்பொழுது இந்திரா காந்தி பேசி தீர்த்துக் கொள்வோம் என்று வழக்கைத் திரும்பப் பெறும்படி கருணாநிதியிடம் கெஞ்சினார். அதை நம்பி கலைஞரும் வழக்கை திரும்ப பெற்றார். ஆனால் வாக்களித்தபடி இந்திரா காந்தி நியாயமாக நடந்து கொள்ளவில்லை.
தன்னுடைய கையாளைப் போன்ற தேவராஜ் மூலம் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான பணி எதிலும் கடுகளவும் முனைப்பு காட்ட வில்லை.
இந்தியாவில் 1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சென்னை மாகாணமும் மைசூர் மாகாணமும் இல்லாமல் போயின.
இந்த விடயத்தில் கருணாநிதியால் கவனம் செலுத்த முடியாமல் போனதற்கு காரணம் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே பேரறிஞர் அண்ணா நோய்வாய் பட்டார்; அடுத்து அவரின் மறைவு; அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வர் யார் என்பதில் கலைஞருக்கும் நாவலருக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை; அது தீர்வதற்குள் எம்ஜிஆர் கட்சியைப் பிளந்தார்.
இதுபோன்ற அரசியல் நெருக்கடியும் வஞ்சகமும் அடுத்தடுத்து சூழ்ந்த நேரத்தில் இந்திரா காந்தி காதும் காதும் வைத்தார் போல தமிழ்நாட்டிற்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.

கிரிஷ் சோடங்கன்
இந்தியா என்ற நாடு உருவாவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு என்ற ஒரு நாடு அரசாட்சி செய்ததை எல்லாம் இந்திரா எண்ணிப் பார்க்கவில்லை.
இந்திராவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தியும் தமிழ்நாட்டிற்கும் திமுகவிற்கும் செய்த துரோகம் கொஞ்சநஞ்சமல்ல.
தமிழீழ விடுதலை போராட்டத்தில் விடுதலைப் புலிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜெயவர்த்தனையுடன் இவர் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு அதில் சான்று கையெழுத்தடும்படி மேதகு பிரபாகரனை வற்புறுத்தினார் ராஜுவ்.
அது ஆகாது போகவே விடுதலைப் புலிகளை ஒடுக்குவதில் முனைப்பு காட்டினார் ராஜீவ்காந்தி.
இந்த சூழ்நிலையில் 1989இல் 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
மத்தியில் நடுவண் அரசை வழிநடத்தி வந்த வி பி சிங் ஆட்சி, பாஜக துரோகத்தால் கவிழ்ந்ததும், நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்களை கொண்டிருந்த ராஜீவ்காந்தி ஆட்சி அமைக்க முற்படாமல் தன் வாழ்நாள் கனவாக பிரதமர் பதவியை எண்ணியே அரசியலில் பயணித்து வந்த சந்திரசேகர் பிரதமராவதற்கு ஆதரவளித்தார் ராஜீவ் காந்தி.

சந்திரசேகர் 56 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் திமுக ஆட்சியை இரண்டு ஆண்டுகளில் கலைக்கும்படி சந்திரசேகரை ஏவியவர் ராஜீவ் காந்தி.
தனது தோழியான ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரு குயுக்தி அரசியல் அதில் பொதிந்து இருந்தது.
சந்திரசேகர் பிரதமராக இருந்த நேரத்தில், தன் வீட்டு எதிர்ப்புறம் இரண்டு போலீஸ்காரர்கள் நடமாடியதாகவும் அவர்கள் தன்னுடைய வீட்டை வேவு பார்க்கின்றனர் என்றும் சந்தேகத்தை எழுப்பி சந்திரசேகருக்கு அளித்து வந்த ஆதரவை மீட்டுக் கொண்டார் ராஜீவ் காந்தி.
இதனால் சந்திரசேகர் பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது; பொதுத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் விடுதலைப்புலிகளின் ஆதிக்கமும் வன்முறையும் பெருகிவிட்டது என்பதுதான்.
அப்பொழுது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணிய சுவாமி இப்படித்தான் புலம்பி வந்தார்.
இரண்டாவது முறையாக கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் 13 முறை ராஜீவ்காந்தி தமிழகத்திற்கு வந்தார். அத்துணை முறையும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்து பத்திரமாக புதுடெல்லிக்கு அவரை அனுப்பி வைத்தவர் கலைஞர் மு கருணாநிதி.

கலைஞர் ஆட்சி ராஜீவ் காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி அவருடைய கையாளாக இருந்த ஆளுநருடைய ஆட்சியில்தான் திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, இடைவார் வெடிகுண்டுக்கு பலியானார்.
ராஜீவ் காந்திற்கு காந்திக்கு பிறகு இந்திய தேசிய அரசியலில் முகம் காட்டிய ராகுல் காந்தி சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் சத்தியமூர்த்தி மாளிகைக்கு வருவாரேத் தவிர முதல்வராக இருந்தாலும் கலைஞரை மரியாதைக்காக கூட சந்திக்க மாட்டார்.
இப்பொழுது புதுடில்லியில் ஆட்சி இல்லாமல் பல் பிடுங்கப்பட்ட பாம்பின் நிலைக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் தமிழ்நாட்டு அரசியலில் திமுகவின் ஆதரவுடன் 10 இடங்களுக்கும் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று வருகிறது.
2011 தமிழ்நாட்டு பொதுத்தேர்தல் சமயத்தில் இந்திரா காங்கிரஸ்க்கும் திமுகவுக்கும் நல்ல உறவு இருந்த நிலையிலும்கூட துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விட்டு சோதனை நடத்தியது.
அதைப்போல 2 ஜி வழக்கில் கலைஞர் தொலைக்காட்சியையும் கலைஞரின் மனைவி தயாளு அம்மாளையும் சம்பந்தப்படுத்தி நெருக்குதல் கொடுத்து அந்த ஆண்டு தமிழ்நாட்டு பொதுத்தேர்தலின் பொழுது அறுபத்து மூன்று இடங்களை பெற்று, வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது காங்கிரஸ் கட்சியால். அந்த சமயத்தில் ஈரோ,ட்டு யுவராஜ் அடித்த கொட்டம் தாங்க முடியாதது.
அந்த யுவராஜ் ஜிகே வாசன் உடன் இணைந்து காங்கிரசுக்கு எதிரணியில் பயணித்தார்; நிறைவாக அவர் பாஜகவில் இணைந்து விட்டாரா என்பதும் தெரியவில்லை
அந்தத் தேர்தலில் அதிகமான இடங்களை வென்ற தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்த நேரத்தில் அரசியல் பாரம்பரியம் இல்லாத விஜயகாந்த் ஜெயலலிதா உடன் மல்லுக்கு நின்று திமுகவையும் பகைத்து கடைசியில் அந்த கட்சியை இன்று கட்டெறும்பாகி விட்டது.
அந்த காலகட்டத்தில் விஜயகாந்த் ஜெயலலிதாவிடம் சொன்னார் “நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டீர்கள்” என்று.
அதைப்போல இப்பொழுது விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தட்டு தடுமாறி ஏறக்குறைய விஜய பிரபாகரனிடம் மண்டியிடும் அளவுக்கு சென்றுவிட்ட மாணிக்கம் தாகூர் என்பவரை வெற்றி பெற வைத்த திமுக மீது நஞ்சு கக்குகிறார். .
தமிழ்நாட்டில் தன்னுடைய அடியாட்களை போன்று விளங்கும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி, விழுப்புரம் எம்பி மாணிக்கம் தாகூர், சிவகங்கை எம் பி கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் டில்லி பொறுப்பாளர்
கிரிஷ் சோடங்கர், மயிலாடுதுறையைச் சேர்ந்த காங்கிரஸ்காரரும் பிராமணரும் ராகுலின் கையாளூமான பிரவீன் சக்கரவர்த்தி, இன்னொரு கையாள் திருச்சி வேலுசாமி ஆகியோரை ஏவி விட்டு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் அடுத்து அமைய இருக்கும் திராவிட ஆட்சியை அடிவாறும் விதமாகவும் இத்தனை பேரையும் ஏவி விட்டு ராகுல் காந்தி கள்ள மௌனம் காக்கிறார்.
ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தனித்து போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்குகளைக் கூட வாங்க வக்கும் வகையும் அற்ற காங்கிரஸ் கட்சி புதுடில்லி ஆட்சியை திரும்பப் பெறுவதற்கு துப்பு இல்லை;
கையருகே வந்த மராத்திய மாநில ஆட்சி ராஜஸ்தான் மாநில ஆட்சி மத்திய பிரதேச ஆட்சி அரியானா மாநில ஆட்சி அதைப்போல நாட்டின் மையப்பகுதியான பீகார், கிழக்குக்கரை மாநிலமான ஒரிசா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு வந்தும் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுக்கவோ விட்டுக் கொடுக்கும் பரந்த நோக்கமோ இல்லாமல் அடுத்தவன் தோளில் ஏறியே பதவி சுகம் காணும் வெறிபிடித்த காங்கிரஸ், சுயநல மோகம் கொண்ட, கீழான புத்தி கொண்ட காங்கிரஸ் கட்சியின் மறைமுக தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் உள்ள சில கையா ஆட்களையும் குறிப்பாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட போலிகளையும் ஏவி விட்டு அடுத்த அமைய இருக்கும் திமுக ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் அதற்கு இசைவாக சட்டமன்ற தொகுதியில் கூடுதலான இடங்கள் வேண்டும் என்றும் மல்லுக்கு நிற்கிறது.
இந்த நயவஞ்சககா கூட்டத்தை எப்படி முறியடிப்பது என்னும் வித்தையை அறிந்தவர் தளபதி திராவிட ஆட்சியின் நாயகர் மு க ஸ்டாலின்.
இன்று இந்திய நாட்டை பிராமணர்களின் ஆட்சியான பாஜக ஆட்சி சூறையாடுவதுடன் பிராமணர்களின் மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் இந்த அளவுக்கு பாஜகவை வளரவிட்டது, துப்பு கெட்ட காங்கிரஸ் கட்சி.
இந்திரா காந்தி குடும்பம் மட்டுமே நாட்டை ஆள வேண்டும்; மாநில தலைவர்கள் எவரும் உருவாகி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததுதான்-இருப்பதுதான் இந்த கட்சி.
எந்த மாநிலத்தில் எந்தத் தலைவர் தலையெடுத்தாலும் அவர்களை மட்டம்தட்டி கீழறுப்பு வேலை செய்வதில் காந்தி குடும்பத்திற்கு இணை காந்தி குடும்பம் தான்.
இதனால்தான் காங்கிரஸ் கட்சிக்காரர்களாக இருந்தாலும் அந்த எல்லையை விட்டு விலகாமல் தனி கட்சி ஆரம்பித்த வரலாறு காங்கிரஸில் ஏராளம்.
ஜிகே மூப்பனார், வாழைப்பாடி ராமமூர்த்தி, சிதம்பரம் இளையபெருமாள், குமரி அனந்தன், மதுரை பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் எல்லையிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் இயக்கம் நடத்தியவர்கள்.
தமிழ்நாட்டில்தான் இப்படி என்றால் ஆந்திரா கேரளம் கர்நாடகம் மராட்டியம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் எந்த தலைவரும் தலை எடுக்க முடியாதபடி செய்ததால் தான் எச்என் பகுகுணா ஒய் பி சவான் சரண்சிங் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், வங்கதேசத்தின் மம்தி பானர்ஜி பிரதாப் முகர்ஜி போன்றவர்கள் எல்லாம் காங்கிரசை விட்டு விலகினர்.
ராகுல், ராஜீவ், இந்திரா காந்தி ஆகிய மூவருமே மாநில அளவிலான காங்கிரஸ் கட்சியை சிதைத்ததால் அந்த கட்சி இன்று குட்டிச்சுவர் கழுதை நிலைக்கு ஆளாகி விட்டது.
முடிவாக தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யவோ கொடியேந்தவோ களப்பணி ஆற்றவோ ஆல் பலமே இல்லாத தொண்டர் என்றால் என்னவென்று அறியாத காங்கிரஸ் கட்சி திமுக தயவில் இப்பொழுது உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பயணிப்பதன் மூலம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்தாக வெற்றி பெற விட்டால் அந்த கட்சி தேசிய அளவில் அனாதையாகிவிடும். எல்லாவற்றையும் மறந்து விட்டு நன்றி கொன்றவர்களாகவும் பட்டை தீட்டிய மரத்தையே பதம் பார்க்கும் விதமாகவும் ஆட்சியில் பங்கு என்று பம்மாத்து காட்டுகிறார்கள்.
1980ல் முரசொலி மாறன் நல்லெண்ண அடிப்படையில் 113 தொகுதிகள் திமுகவிற்கு; 113 காங்கிரஸ் இயக்கத்திற்கு 113 இடங்கள் என்று சம அளவில் பங்கிட்டு ஒரு புது மாதிரியான அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டார்.
கடைசியில் அது தோல்வியில் முடிந்தது.
1980 ஜூன் சட்டமன்ற பொது தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் பதவியை ஏற்பது? திமுக சார்பிலா அல்லது காங்கிரஸ் சார்பிலா என்று தேவையில்லாத கேள்வியை எழுப்பி குழப்பத்தை விளைவித்து கடைசியில் எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அப்பொழுது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவராக இருந்த எம்பி சுப்பிரமணியம் ஏற்படுத்தினார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு உரிய நயவஞ்சக குணத்தை காட்டியது.
கலைஞர் பலமுறை சொன்னார்; மேலிடத்தில் அதாவது இந்திரா காந்தியிடம் பேசி முடிக்கப்பட்ட விவகாரத்தை இப்பொழுது தேர்தல் களத்தில் பேச வேண்டாம் என்று கலைஞர் பலமுறை சொல்லியும் எம்பி சுப்பிரமணியம் தொடர்ந்து கலகத்தை எழுப்பி கொண்டே வந்தார்.
இதன் விளைவாக திமுக போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காமல் துரோகம் பிழைக்கும் விதமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தது; அதை போலவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவும் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியது.
இதன் விளைவாகவே அந்த பொது தேர்தலில் எம்ஜிஆர் மீண்டும் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார்.
தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இத்தகைய சர்ச்சை எழுந்த நேரத்தில் இந்திரா காந்தி எம்பி சுப்பிரமணியத்தை அடக்கி வைக்காமல் கள்ள மௌனம் காத்து ஒதுங்கி நின்றார்.
அந்த நேரத்தில் இந்திரா காந்தியின் நாக குணம் பச்சையாக வெளிப்பட்டது;
அதைப்போல, இப்பொழுதும் ஐந்து ஆறு பேரை ஏவி விட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக இடம்; ஆட்சியில் பங்கு என்று ஏவி விட்டு ராகுல் காந்தி கள்ளதா தனமாக ஒதுங்கி நிற்கிறார்.
கடந்த தேர்தல் நேரத்தில் இவர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது திடீரென்று வாகனத்தில் இறங்கி சாலையைக் கடந்து இனிப்பு வாங்கி என் அண்ணனுக்கு என்று ஸ்டாலினிடம் கொடுத்ததெல்லாம் ஒரு பச்சையான தந்திரம் கேவலமான நடவடிக்கை.
தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிக இடங்கள் வேண்டும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பதற்கு இவர்களிடம் என்ன தகுதி இருக்கிறது?
எதற்கெடுத்தாலும் புதுடில்லி மேலிடத்தைக் கேட்க வேண்டும் என்று புது டில்லிக்கு காவடி தூக்குகின்ற இந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் அடிமைகள், இந்த விடயத்தில் மட்டும் புதுடில்லியை கேட்காமல் இதுகளாகவே கொட்டமடிக்க வேண்டிய அவசியம் என்ன
ராகுல் காந்தியின் சுண்டுவிரல் அசைவு இல்லாமல் இவை யாவும் நடைபெற வாய்ப்பே இல்லை
இப்பொழுது கூட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலகும் முடிவை எடுத்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் அறியப்பட்ட முகமாகவும் சிறந்த ஆளுமை மிக்கவராகவும் இருக்கின்றவர் ப. சிதம்பரம்.
அரசியல் முதிர்ச்சியும் பாரிய அனுபவமும் மிக்க அவரை தேசியத் தலைவராக அறிவிக்காமல், அமர்த்தாமல் சந்துமுனை சிந்து பாடிகள் கூட அறியாத கர்நாடகாவை சேர்ந்த மல்லிகா ர்ஜுன கார்கே என்பவரை நியமித்து அவரை கொலு பொம்மை போல அமர வைத்து, சோனியாவும் ராகுல் காந்தியும் சாவி கொடுத்துக்கொண்டு இயக்குகின்றனர்.
மன்மோகன் சிங்கை போல அவரும் அடிமை குணம் வாய்த்தவர்.
இதைப் பற்றி எல்லாம் எண்ணி பார்க்க ஒரே ஒரு காங்கிரஸ்காரனுக்குகூட அறிவும் தெளிவும் துணிவும் கடுகளவும் இல்லை.
இதைப் பற்றி பேச திருச்சி வேலுசாமிக்கோ சிரித்தால் கூட வில்லியைப் போல காட்சி தருகின்ற வாயாடி-வம்பாடி ஜோதிமணிககோ வெறும்பேச்சு வெள்ளைவேட்டியான கார்த்தி சிதம்பரத்திற்கோ கடுகளவும் துப்பில்லை.
சோனியா காந்தியை முதன் முதலில் தேசியத் தலைவராக அறிவித்தவர் கலைஞர் மு கருணாநிதி; அதைப்போல இரண்டு தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தவர் மு க ஸ்டாலின்.
இந்த அளவிற்கு வெளிப்படையாகவும் முழு ஆதரவோடும் செயல்படுகின்ற கட்சியையும் தலைமையையும் அனுசரித்து உண்மையுடனும் நேர்மையாகவும் நடந்து கொள்ள விரும்பாத காங்கிரஸ் கட்சியின் அடியாட்களும் எடுபிடிகளும் வெற்றுக் கூச்சலிடுகின்றன;
இவர்களுக்கான சரியான பாடத்தை வாயடைத்து மூர்ச்சடையும் வகையில் அதிரடியான அரசியல் முடிவை மு க ஸ்டாலின் நிச்சயம் எடுப்பார்.
தமிழகத்தில் இப்பொழுது உலகளாவிய நிலையில் அயலக தமிழர் நாள் விழா நடந்து கொண்டிருக்கும் வேளையில் இதே அயலக மண்ணிலிருந்து ஸ்டாலினை அடுத்த திராவிட மாடல் ஆட்சியை அதிரடியாக அமைத்து உலக அளவில் துரோக வஞ்சக அரசியலுக்கு பெயர் பெற்ற காங்கிரஸ்காரர்களின் மூக்கை உடைப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறாள் குமரி நல்லாள்.
திமுகவை தீய சக்தி என்று சொல்கிறான் ஒரு கூத்தாடி; கோடிக்கணக்கானசம்பள பணத்தை கருப்பு பணமாக வாங்கி அரசாங்கத்தை ஏமாற்றும் வரிஏய்ப்பு மோசடிக்காரன்; அநியாயமாக 41 பேரை பலி கொண்ட பிண நாயகன்.
அப்படிப்ட்ட புத்தரசியல் தலைவன் பாஜகவின் குண்டாந்தடி;
அப்படிப்பட்ட ஒரு உடன் கடந்த ஒரு மாமாங்க காலத்திற்கும் மேலாக திமுகவினால் அரசியல் வாழ்வு பெற்று வரும் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சமும் நன்றி உணர்வு இல்லை.
கூட்டணியின் தலைமை திமுகவை தற்காப்பதற்கு பதிலாக திருச்சி வேலுசாமி, பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் விஜய்யுடன் அரசியல் கள்ள உறவு கொள்வது பச்சையான அரசியல் போக்கிரி தினம்.
வரும் சட்டமன்ற தேர்தலும் அதைத் தொடரும் நாடாளுமன்ற தேர்தலும் இதற்கு எல்லாம் கட்டியம்கூறும் தமிழ்நாட்டு அளவில்..!
புதுடில்லி இனி காங்கிரசுக்கு இல்லை என்று ஆகிவிட்டது; அதனால் முதல் முதலில் விட்ட இடத்தை பிடிப்போம் என்ற மனப்பாங்கில் இந்திய வரலாற்றில் காங்கிரஸ் பேரியக்கத்தை முதன் முதலில் ஆட்சியில் இருந்து அகற்றிய ஒரு மண்டல கட்சி திமுக என்ற வயிற்றெரிச்சலில், காங்கிரஸ்காரர்கள் ஒரு கையில் பூவும் மறுகையில் கத்தியுமாக இப்படி எல்லாம் குறுக்குவழியில் செயல்படுகின்றனரோ என்னவோ தெரியவில்லை.
எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்!


