Sunday, April 19, 2026

டான்ஸ்ரீ சோமா, டத்தோ சகாதேவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

மலேசியாவில் மொழி வளர்ச்சிக்காக, தனி அறவாரியம் அமைத்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் இலக்கியப் பயிர் வளர்த்துவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர் ‘கபிலவாணர்’ டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், சங்கத்தின் நிருவாக இயக்குநரும் செயலாளருமான டத்தோ பா. சகாதேவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து மரியாதை செய்தார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட சகாதேவனின் பிறந்த நாளையொட்டி, இன்று காலையில் துன் சம்பந்தன் மாளிகை, 10-ஆவது தலத்தில் அமைந்திருக்கும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க அலுவலகத்தில், கூட்டுறவு சங்க நிருவாக செயலர் டத்தோ கிளி ரத்தின ராஜ், இயக்குநர்கள், பணியாளர்கள், மாநிலப் பேராளர்கள் உள்ளிட்டோர் புடைசூழ டான்ஸ்ரீ சோமசுந்தரம், டத்தோ சகாதேவனுக்கு மாலை அணிவித்து அணிச்சலும் ஊட்டிய பாங்கைக் கண்டு அனைவரும் மனம் நெகிழ்ந்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை