Monday, May 25, 2026

திருமுறை இன்னிசை அரங்கம் 2026! -திருமுறை நம் உரை முறை!!

கோலாலம்பூர் ஜன 16-
மலேசிய சச்சிதானந்தா கலை மற்றும் கலாச்சார சங்கம், அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களின் இசை சமர்ப்பணத்தில், பக்தி பரவசமூட்டும் ‘திருமுறை இன்னிசை அரங்கம் 2026’ நிகழ்வை மகிழ்வுடன் வழங்குகிறது.

தெள்ளுற்ற தமிழமுதாம் திருமுறையை இசையோடு குழைத்து, இறையருளில் திளைக்கச் செய்யும் இந்தத் தெய்வீக மாலைப் பொழுதில் கலந்துகொள்ள, அடியார்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாள்: 24 ஜனவரி 2026 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 7.00 மணி
இடம்: Shanthananand Auditorium, Temple of Fine Arts, Brickfields

இன்னிசையால் ஈசனை உருகி வழிபடவும், திருமுறை காட்டும் அருள் நெறியில் உள்ளம் குளிரவும் வாரீர்!

பதிவு செய்ய: https://forms.gle/vARNDFovLgTrrDBs6

தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் லெப்டினன்ட் கர்னல் Dr. விக்னேஸ்வரன் – 019-300 4742
சரவணன் – 016-665 8196
திருமதி நாகராணி – 012-552 5684
திருமதி கோமளா – 012-942 2079

திருமுறை காட்டும் செந்நெறி நம் உள்ளங்களை ஒளிரச் செய்து, நம் வாழ்வை வளமாக்கட்டும். அனைவரும் வருக

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!

இத்தகவலைத் தாங்கள் அறிந்த அடியார்களுடனும் பகிர்ந்து இறையருள் பெறுங்கள். நன்றி

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை