Tuesday, April 21, 2026

பினாங்கு தைப்பூசத்தை முன்னிட்டு LINERZ Motorsports ஏற்பாட்டில் மாபெரும் தண்ணீர் பந்தல்!

ஜோர்ஜ் டவுன், ஜன 21- தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு பால தண்டாயுதபாணி கோவில் ஜாலான் உத்தாமாவில் LINERZ Motorsports ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்படவுள்ளது.

LINERZ Motorsports தலைவர் விஜயமாணிக்கம் என்ற விஜேய் தலைமையில் January 31ஆம் தேதியும் மறுநாள் தைப்பூசத் தினத்திலும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு பானங்களும் உணவுகளும் வழங்கப்படும்.

தண்ணீர் பந்தலுக்கு சிறப்பு வருகை புரியும் பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்யப்படவுள்ளது.

தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதால் இம்முறை பினாங்கு தைப்பூசம் ஜெகஜோதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று அவர் சொன்னார்.

தகவல்:
செ.வே. முத்தமிழ் மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை