Sunday, May 3, 2026

அன்றைய தானைத் தலைவரும் நாளைய தானைத் தலைவரும்!

அடுக்குமொழி அனல் தெறிக்க
அசைக்க முடியாத
சிம்மக் குரலாய்
அன்று- சாமிவேலு
பண்பாட்டுச் சிகரம் ஏறி நிதானத்தால் நிமிர்ந்து
புதிய சரித்திரம் எழுதும் கணீரென்ற குரலாய் இன்று- சரவணன்

தமிழுக்காகத் தவம் இருந்து நூல்கள் பல பிரசவித்து
நற்றமிழின் நறுமணம் பரப்பிய சாதனையாளர் அன்று- சாமிவேலு
அந்தத் தமிழ் வேள்வி தடையின்றித் தொடரவே
தன்னையே அர்ப்பணிக்கும் தர்மத்தின் தலைவன் இன்று- சரவணன்

மேடை எனும் போர்க்களத்தில்,
ஒரு கை அசைவில்
ஆயிரமாயிரம் கண்களைக் கட்டிப்போட்ட முழக்கம்
அன்று- சாமிவேலு
தரவுகள் எனும் ஆயுதம் ஏந்தி உரிமைப் பேசி
உலகுக்குத் தமிழ் காட்டும் அறிவுப் புயல்
இன்று-சரவணன்.

தமிழ்ப்பள்ளிகளைத்
தோள்களில் சுமந்த இமயம்
அன்று- சாமிவேலு
தமிழ்க்கல்வி உரிமையை மீட்டெடுக்க
ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரக் குரல்
இன்று- சரவணன்

​இனம் வெல்ல வேண்டும் எனும்
அந்தத் தணியாத தாகம்
அன்று அவரிடம் நெருப்பாய் எரிந்தது
இன்று இவரிடம்
சுடராய் ஒளிர்கிறது

எம்.விவேகானந்தன்

Made with LogoLicious Add Your Logo App


செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை