Sunday, April 19, 2026

இன்று டிசம்பர் 31 மாலை, அபிராமி அந்தாதி பாராயாண விழா!

உலகாளும் அன்னை உமையவள் திருவருள் துணையுடன் இன்று அபிராமி அந்தாதி பாராயண விழா, ஷா ஆலம், செக்ஷன் 16, அருள்மிகு புவனேசுவரி அம்மன் தேவஸ்தானத்தில் பக்தி மணம்கமழ நடைபெற இருக்கிறது என்று ஆலய நிருவாகக் குழு சார்பில் அதன் தலைவர் கி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேவஸ்தான நிருவாகக் குழு, மகளிர் பிரிவினரின் முழு ஆதரவுடன் மலேசிய இந்து அறநெறிக் கல்வி மைய ஏற்பாட்டில் இன்று டிசம்பர் 31, செவ்வாய்க்கிழமை முன்னிரவு 7:00 மணி அளவில் நடைபெற இருக்கும் இந்த அபிராமி அந்தாதி பாராயண விழாவில், அம்மனுக்கு ஒரு பாராயணத்திற்குப் பின் ஒரு பிரசாதம் என, 102 பிரசாதங்கள் படைக்கப்பட இருக்கின்றன.

ஆத்ம சாந்தி பிரார்த்தனையுடன் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அபிராமி அந்தாதி பாராயணத்தைத் தொடர்ந்து, மலேசிய இந்து அறநெறிக் கல்வி மையத் தலைவர் இராம.சுப்பிரமணியன், மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் கணேஷ் பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர் என்று ஆலய துணைத் தலைவர் மணி அரசு கூறினார்.

அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் தேவஸ்தானத் தலைவர் கி.சுப்பிரமணியன் ஏற்புரைக்குப்பின், மூல மந்திரமும் சம்பூர்த்தி வைபவமும் இடம்பெறும்.

இதில் அனைவரும் கலந்துகொண்டு, அம்பாளின் அருளைப் பெற்று நீடுவாழும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இந்த இறைவிழா குறித்த மேல் விவரத்திற்கு 016-322 1652, 014-695 3650 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று, ஆலயச் செயலாளர் சந்தன தாஸ் கூறினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை