Monday, April 20, 2026

தைப்பூச திருவிழா சீராக நடைபெறுகிறது!மடாணி அரசுக்கு துணை அமைச்சர் யுனேஸ்வரன் பாராட்டு!!

“2026 தைப்பூசத் திருவிழா சீராகவும் செம்மையாகவும் ஆன்மீக நெறியோடும் பக்திமனம் கமழவும் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது”.

இதன் தொடர்பில் எல்லா வகையான ஒத்துழைப்பு- ஆதரவுடன் முன்னேற்பாடும் வழங்கி வருகின்ற மடாணி அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜோகூர் மாநிலத்து சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் தெரிவித்தார்.

தண்ணீர்ப் பந்தலுக்கு வருகை தந்த கலைவாணர்

கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட வெள்ளிரதம் பத்து மலையை நோக்கி மெல்ல ஊர்ந்து வருகின்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பத்துமலை நோக்கி கால்நடையாக நடந்து செல்கின்றனர். அவர்களோடு வந்த துணை அமைச்சர் ஈப்போ சாலையில் (ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா) இணைய ஊடகங்களான தமிழ் லென்ஸ், தினத்தந்தி ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலுக்கு யுனேஸ்வரன் வருகை தந்த பொழுது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

குறிப்பாக போக்குவரத்துத் துறை மிகப் பெரிய அளவில் தைப்பூச திருநாள் தொடர்பில் ஏற்பாடு செய்திருப்பது பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகவும் வசதியாக இருப்பதாக மேலும் குறிப்பிட்டார் துணை அமைச்சர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை