Monday, May 25, 2026

இந்திய அரசு நிதிநிலை அறிக்கை! தமிழ்நாட்டு முதல்வர் நிதி கோரிக்கை!!

“வழக்கமாக சொல்லும் திருக்குறளோடு சேர்த்து தேர்தலை மனதில் வைத்தாவது தமிழ்நாட்டுக்கான திட்ட அறிவிப்புகளை வெளியிடும்படி தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

நூற்று நாற்பத்தைந்து கோடி மக்கள் வாழும் நாட்டிற்கு நிதியமைச்சராக இருந்தாலும்
‘ஆலயங்களுக்கு வருகின்ற பக்தர்கள் உண்டியலில் காசு போடாமல் அர்ச்சனைத் தட்டில் அந்தப் பணத்தைப் போட வேண்டும்’ என்று கேட்பதன் மூலம் தட்டேந்திப் பிழைக்கும் தங்களின் பாரம்பரிய சனாதன புத்தி மாறவே மாறாது என்பதை அடிக்கடி நிரூபித்துவரும் நிர்மலா சீதாராமன் இந்திய நடுவணரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த கோரிக்கைப் பட்டியலை முன் வைத்துள்ளார்.

விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள மாணவர் கல்வி மேம்பாட்டு நிதி 3,548 கோடி ரூபாய்;

கோவை மதுரை பெருநகரங்களுக்கான ‘மெட்ரோ’ ரயில் திட்டம்;

தமிழ்நாட்டு அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்திற்கான ரூபாய் 3,112 கோடி நிதி;

புதிய ரயில் திட்டங்கள்;

நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ள படி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான 50 விழுக்காட்டு நிதி பகிர்வு;

இன்னும் பட்டியல் இருக்கிறது இருந்தபோதும் தேர்தலை மனதில் வைத்தாவது இந்த முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை தவறாமல் புது டில்லி நடுவணரசு அறிவிப்பு செய்யும் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவை மதுரை ‘எய்ம்ஸ்’ பல்கலைக்கழக அறிவிப்பை போல நின்றுபோகாமல் முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்ட வேண்டும் என்ற உறுதிப் பாட்டையும் முன்வைக்கிறோம் என்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் தலைநாயகர் கேட்டுக் கொண்டிருப்பதாக தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை