Tuesday, February 17, 2026

கோவில்களின் நிலப் பிரச்சனைக்குசிலாங்கூர் அரசு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும்! -டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

பத்துமலை தைப்பூசத் திருநாளில் சிலாங்கூர் மாநில அரசு 53 கோவில்களுக்கு 5 லட்சத்து 79 ஆயிரம் வெள்ளியை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது என்று மக்கள் முற்போக்கு கட்சி-பிபிசி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து 18 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று சிலாங்கூர் மாநில கோவில்களுக்கு மானியம் வழங்கி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும் அண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் பல இடங்களில் ‘ஹராம்’என்று முத்திரை குத்தப்பட்ட கோவில்களை இடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இது இந்திய சமுதாயம், அரசு சாரா நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல இன-சமய மக்களிடையே மீண்டும் ஒருமுறை கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழிபாட்டுத் தலங்களில் பெரும்-பாலானவை பல தசாப்தங்களாக உள்ளன. அவை கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தெளிவாக இல்லாத அல்லது அந்த நேரத்தில் இன்னும் நிறுவப்படாத சூழ்நிலையில் கட்டப்பட்டு உள்ளன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஆகவே ஒரு சில தரப்பினர் கோவில் ஹராம் என்று தொடர்ந்து முத்திரை குத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் சுரேந்திரன் கூறினார்.

ஆகவே நிலப் பிரச்சனைக்கு ஆளாகி இருக்கும் கோவிலுக்கு மாற்று நிலம் வழங்கி நல்ல முறையில் தீர்வு காண சிலாங்கூர் மாநில அரசு முன் வர வேண்டு
ம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை