Monday, May 4, 2026

இந்து கோவில்கள் மீது அவதூறு!மாமன்றம் அதிருப்தி!!

இந்துக் கோவில்களை “ஹாராம் (Haram)” என அவமதிக்கும் சம்பவம் குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் மிகுந்த அதிருப்தியைக் கொண்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள், இந்து சமூகத்தை அவமதிப்பதோடு மட்டுமல்லாமல்,
பல்லின மக்கள் வாழும் நம் நாட்டின் மத நல்லிணக்கத்தையும் சிதைக்கின்றன.

அனைத்து மதங்களையும் சமமாகப் பாதுகாக்கும் அரசியல் அமைப்புச் சட்டக் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது என்பது நடுநிலையல்ல; அது பொறுப்பின்மையையே வெளிப்படுத்துகிறது.

இந்துக்கள் சிறப்புச் சலுகையைக் கோரவில்லை. மாறாக, கூட்டாட்சி அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை மரியாதை, பாதுகாப்பு, நீதி
ஆகியவற்றை மட்டுமே வேண்டுகிறோம்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவது, ஒற்றுமை மனப்பான்மை மற்றும் மலேசிய மடானி கொள்கை மீதான உறுதிபாட்டைக் குறித்து கடுமையான அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது

மலேசியத் திருநாட்டில் மத நல்லிணக்கம் விவேகமான நடவடிக்கைகளால் மட்டுமே நிலைநாட்டப்பட வேண்டும்.
மாறாக, வெற்று வாக்குறுதிகளால் அல்ல!

இந்து சமூகத்தின் கண்ணியம் இழிவுபடுத்தலுக்கு உட்பட்டதல்ல!!!

இங்ஙனம்;
மலேசிய இந்துதர்ம மாமன்றம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை