Monday, May 4, 2026

‘இந்துக்கள் கொல்லப்படுகின்றனர்’: -முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டுவதாக அன்வார் அதிர்வேட்டு! யார் அந்த முன்னள் அமைச்சர்? பெயரைச் சொல் அல்லது திரும்பப்பெறு: -பொன்.வேதமூர்த்தி எதிர்வேட்டு!!

தன்மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் அபாண்ட முறையிலும் சாடைப் பேச்சு என்னும் சுட்டுமொழியிலும் அவதூறு புரிந்துள்ள பிரதமர் அன்வார், 48 மணி நேரத்தில் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி கெடு விதித்துள்ளார்.

“ஒரு முன்னாள் அமைச்சர் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசியுள்ளார்; மலேசிய-வாழ் இந்துக்கள் தங்கள் மதத்தை கடைப் பிடிக்க அனுமதிக்கப் படவில்லை; அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். மேலும் பிரதமர் பிற இனங்களின் உரிமைகளை கேள்வி எழுப்புகிறார்” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த-தாக The Star.com என்னும் ஆங்கில இணைய தளத்தில் நேற்று தகவல் வெளியிடப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மிகக் கடுமை-யானவை. தவிர, இனவெறியைத் தூண்டு-தல், மதச்சார்பான குற்றச்சாட்டு, தேசிய பாதுகாப்பு-பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன. பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அது அரசியல் கருத்தாக அமையாது; சட்டரீதி-யான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உண்மையான குற்றச்சாட்டாகும்.

“பிரதமர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சூழல் மற்றும் உள்ளடக்கத்தில் இருந்து, அவர் குறிப்பிட்ட ‘முன்னாள் அமைச்சர்’ நான்தான் என்பது தெளிவாக உள்ளது. அது உண்மையாக இருந்தால், பிரதமர், தன்மீது மிகக் கடுமையான குறச்சாட்டை முன்வைத்-துள்ளார்”.


ஒரு முன்னாள் அமைச்சர்மீது “இனவெறியைத் தூண்டினார், மத அடக்குமுறை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளைப் பரப்பினார்” என்று குற்றம் சாட்டுவது சாதாரணமாகச் சொல்லக்கூடிய விசயம் அல்ல. பிரதமரின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், மலேசிய சட்ட அமலாக்கத்தின்படி இது பெருங்குற்றமாகும்; அதன்படி, காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தி வழக்கும் தொடர வேண்டும். ஆனால் அது உண்மை-யல்ல என்றால், பிரதமர் கூறியவை பொறுப்பில்லாத அவதூறு; அதிகார துஷ்பிரயோகம்; ஆதாரமின்றி ஒருவரின் கண்ணியத்தையும் நற்பெயரையும் கெடுக்க முயற்சி செய்ததாகக் கருதப்படும்.பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் தெளிவில்லாமல் குற்றம் சாட்டுவதும் அரசியல் அச்சத்தால் சாடைமொழி அல்லது சுட்டுமொழியில் பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் பதவி என்பது மேன்மை, துல்லியம், கட்டுப்பாடு, கடப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

பிரதமர் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் தான்தான் எனத் தெளிவாகவும் நேரடியாக-வும் அறிவிக்க வேண்டும்.


அவர் குறிப்பிடும் முன்னாள் அமைச்சர், தான்தான் என்றால், பிரதமர் முன்வைத்-துள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளிப் படுத்த வேண்டும்.


சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் தான் அல்லர் என்றால், அந்த முன்னாள் அமைச்சரின் பெயரை பிரதமர் அன்வார் வெளியிட வேண்டும்.

எனவே, பிரதமருக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்று நேற்று பிப்ரவரி 09-ஆம் நாள் பிற்பகல் 3:30 மணி அளவில் ஆங்கில மொழியில் வெளியிட்ட அறிக்கையில் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேத முர்த்தி காலக்கெடு விதித்துள்ளார்.

வழக்கமாக 24 மணி நேரம் போதுமானது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் சட்டரீதியான விளைவுகளையும் கருத்தில் கொண்டு, பிரதமர் தன் சட்ட ஆலோசகர்களு-டன் ஆலோசிக்க கூடுதலலாக 24 மணி நேரம் வழங்குகிறேன் என்று பொன்.வேதமூர்த்தி தாராளத் தன்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மலேசியாவிற்கு உண்மையின் அடிப்படை-யிலும் ஆதாரங்களால் உறுதிப் படுத்தப்பட்ட தலைமைதான் தேவையேத் தவிர அச்சமோ, சாடைப்பேச்சோ அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டோ அல்ல என்றும் 48 மணி நேர காலக்கெடு இப்பொழுது தொடங்குகிறது என்று நேற்று 2026 பிப்ரவரி 9-ஆம் நாள் 3:30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் சட்ட வ்ல்லுநருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை