Monday, May 4, 2026

அந்நியத் தொழிலாளர் விவகாரம்! உரிமம் பெற்ற ஏஜென்சிகளுடன் மனிதவள அமைச்சகம் பேச்சு நடத்த வேண்டும்!

கோலாலம்பூர் பிப் 13-
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் விவகாரம் தொடர்பாக உரிமம் பெற்ற ஏஜென்சிகளை அழைத்து மனிதவள அமைச்சு ஒரு சுமூகமாக பேச்சு நடத்த வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பூர்வமாக அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் லெசென்ஸ் பெற்ற மலேசிய ஏஜென்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நாங்கள் முறையாக பதிவு பெற்ற ஏஜென்சிகள். நாங்கள் செய்யும் வேலைக்கு மட்டுமே ஊதியம் வாங்குகிறோம்.

வெளிநாட்டு ஏஜென்சிகள் தொழிலாளர்-களிடம் 20,000 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் பணத்தை கொடுத்து தொழிலாளர்கள் அவதி படுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு உதவத் தயாராக இருக்கிறோம். எவ்வித முறைகேடு இல்லாமல் அந்நியத் தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக நாட்டிற்கு தருவிக்கும் அனுமதியை பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia என்ற அமைப்பின் உதவித் தலைவர் சுரேஷ் தான் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்தத் தருணத்தில் அந்நியத் தொழிலாளர்-களைத் தருவிக்கும் மூன்றாம் தரப்பு – இடைத்தரகர்கள் யார் என்பதை மனிதவள அமைச்சு தெளிவு படுத்த வேண்டும்.

நேப்பாள, வங்காள தேசத் தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிக்க ஆளுக்கு 20,000 வெள்ளி வாங்கும் ஏஜென்சிகள் நாங்கள் அல்ல.

ஆகவே இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண மனிதவள அமைச்சை சந்தித்து கலந்துரையாட தயாராக இருக்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் Persatuan Agensi Pekerjaan Malaysia ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பாகோ சிவா கலந்து கொண்டார்.

நாட்டில் பல துறைகளில் குறிப்பாக சிறுதொழில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உதவ சங்கம் தயாராக இருக்கிறது.

இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு வரவழைக்க சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தகவல்: செ.வே. முத்தமிழ் மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை