Monday, May 4, 2026

தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

கோலாலம்பூர் பிப் 15
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

மலேசிய இந்து சங்கமும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியும் இணைந்து இந்து சமய அமைப்புகள் மற்றும் ஆலய அமைப்புகளின் ஆதரவுடன் தேசிய இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படடுள்ளதாக மலேசிய இந்து சங்கத் தலைவர் சங்கபூசன் தங்க கணேசன் இன்று அறிவித்தார்.

“நாட்டின் பல பகுதிகளில் நில உரிமைப் பிரச்சினைகளால் ஆலயங்கள் உடைப்படும் அபாயத்தை எதிர்கொள்ளும் சூழலால், இந்து சமுதாயத்தில் கவலையும் பதற்றமும் உருவாகியுள்ளன”.

இதனைத் தீர்க்கும் நோக்கில், இந்த குழு அடுத்த 6 மாதங்களில் ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வ காணும் (regularisation/whitening) செயல்முறையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

செயல் திட்டம்
1. முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் நிரப்ப வேண்டிய புதிய Google Form தொடங்கப்படும்.

2.  அந்தத் தரவின் அடிப்படையில் ஆலயங்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.

3.  அதன் பின்னர்  நிர்வாகக் குழுவினர்  ஆலய. பொறுப்பாளர்களைச் சந்தித்து வழிகாட்டுதல் மற்றும் சட்ட உதவி வழங்குவர்..

இந்த அணுகுமுறையின் மூலம் பல ஆலயங்களை சட்டப்பூர்வமாக்க முடியும் என்னும் நம்பிக்கையை குழு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் கோரிக்கை:
இத்தகைய பணிகள் நிறைவு பெற்றபின் அரசாங்கத்திடம் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்:

  • ஆலய இடிப்பு நடவடிக்கைகளுக்கு 6 மாத இடைக்காலத் தடை(moratorium) வழங்க வேண்டும்.
  • இடிப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட மத மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்; இந்நிகழ்வுகளில் திறந்த இடிப்பு சமுக உணர்வுகளை புண்படுத்தும்
  • ஓர் ஆலயம் என்பது கட்டிடம் அல்லது சிலை மட்டுமல்ல — அது மக்களின் நம்பிக்கையும் ஆன்மிகவாழ்வும் ஆகும் என்று அவர் சொன்னார்.

ஆலயத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால்:
தெய்வ உருவங்கள் முறையான ஆகம சட்டங்களுடன் மாற்றப்படும்;

தேசிய ஒற்றுமை, மத மரியாதை மற்றும் சட்டப்பூர்வ தீர்வுகளை உறுதி செய்வதற்காக, ஆலய இடிப்பு மற்றும் மாற்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் 6 மாத இடைக்கால தடை விதித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்து சங்கத்தின் அலுவலக மண்டபத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், ஆகம அணித் தலைவர் அருண் துரைசாமி, மலேசிய இந்து தர்ம மாமன்றமத் தலைவர் வ.ரிஷிக் குமார், மலேசிய இந்து வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஆர்.வி. லிங்கம் உட்பட பல இயக்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை