Monday, March 9, 2026

நாடு முழுவதிலும் 1,200 ஆலயங்கள் உடைபட இருக்கின்றன!

பெர்லிசில் இருந்து ஜோகூர் மாநிலம் வரை ஏறக்குறைய 1,200 ஆலயங்கள் உடைபடக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கின்றன என்று டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

இந்து சமயத்தைச் சார்ந்த வழிபாட்டுத் தலங்கள் சொந்த நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளதா; முறையான நிர்வாகக் கட்டமைப்பு இருக்கிறதா; நிதி நிருவாக நடைமுறை சீராக இருக்கிறதா; ஆலயம் புறம்போக்கு நிலத்தில் இருக்கிறதா; மரத்தடியில் வழிபாட்டுத் தலம் இருக்கிறதா; குடும்ப கோயிலா; ஆலய நிர்வாகக் குழுவில் குடும்ப உறுப்பினர்கள்- சாதிக்காரர்கள்- உறவினர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளனரா; மக்களிடையே பக்தியை வளர்க்கும் வகையில் ஆன்மீக நடைமுறைகள் செம்மையாக நடைபெறுகிறதா; அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் நிர்வாகத் தரப்பில் கணக்கறிக்கை
தாக்கல் செய்யப்படுகிறதா; உண்டியல் பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா; ஆலய நிர்வாகக் குழுவினர் பதவிக்காக சண்டையிடுகின்றனரா என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு அடையாளம் கண்டு வரையறை செய்து நாட்டில் உள்ள ஆலயங்கள் மடாணி அரசின் சார்பில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மிகச்சிறந்த ஆலயங்கள் பச்சை வண்ணத்திலும் ஓரளவிற்கு சிறப்பாக செயல்படுகின்ற ஆலயங்கள் ஆரஞ்சு வண்ணத்திலும் எந்த வகையாலும் ஒழுங்குப்படுத்த முடியாத ஆலயங்கள், குறிப்பாக சுதந்திர மலேசியாவில் நிலம் இல்லாமல் கட்டப்பட்ட ஆலயங்கள் கணக்கு வழக்கு நிர்வாகம் சீராக இல்லாத ஆலயங்கள் பாலத்தின் கீழும் வருத்தத்தின் கீழும் இருக்கின்ற ஆலயங்கள் மரத்தடி வழிபாட்டிடம் போன்றவை சிவப்பு வண்ணத்தின்கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

சொந்த நிலத்தில் இல்லாத ஆலயங்கள் கட்டாயமாக சிவப்பு வண்ணத்தின்கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஓர் ஆலயம் 60 ஆண்டுகளாக சுதந்திர மலேசியாவில் செயல்படுகிறது. ஐந்தாறு தலைவர்கள் மாறிவிட்டனர். வழிபாட்டுச் சிலைகூட ஐந்து – ஆறு அடி உயரத்தில் இருக்கிறது.

ஆனால் ஆலய நிர்வாகம் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ஆவணங்கள் எதுவுமே இல்லை. அந்த ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கான உரிமத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சியோ எண்ணமோ இல்லை. இப்படிப்பட்ட ஆலயங்கள் எல்லாம் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது ஆலயங்கள் சம்பந்தமாக பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகின்ற நிலையில் நல்ல ஆலயங்களை காப்பாற்ற வேண்டும்; ஆலய நிர்வாகத்தினருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதன் அடிப்படையில் மலேசிய இந்திய நம்பிக்கை அறவாரியத்தின்-Malaysian Indian Hope Foundation சார்பில் சமூக- சமய- ஆர்வலர்களும் ஆலய பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.

மிகவும் சீராகவும் செம்மையாகவும் நடைபெறுகின்ற 500 ஆலயங்கள் பச்சை அடையாளத்துடன் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சில ஆலயங்களில் செவ்வாய்- வெள்ளிக் கிழமைகளில் பூசைகூட நடப்பதில்லை.

ஏதோ ஒரு திருவிழா என்றால், அந்த நேரத்தில் மட்டும் வசூல் செய்வதற்காக திடீரென்று தயாராகி விடுகின்றனர்.

அப்படியெல்லாம் இல்லாமல் வாரந்தோறும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வருகின்றனரா என்பதெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த அறவாரியத்தின் தலைவருமான டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை