Thursday, April 2, 2026

இந்து கோவில்களை காப்பாற்ற மலேசிய இந்து அறப்பணி வாரியத்தை அமையுங்கள்! -டத்தோ இராமச்சந்திரன்

மலேசியாவில் இந்து வழிபாட்டுத்தலங்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க மலேசிய இந்து அறவாரியத்தை அமைக்க வேண்டும் என்று மலேசிய இந்தியர் நம்பிக்கை அறவாரியத்தின் தலைவர் டத்தோ இராமச்சந்திரன் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் பினாங்கு இந்து அறவாரியம் உள்ளது.

பினாங்கு இந்து அறவாரியத்தின் கீழ் பினாங்கில் உள்ள கோவில்களுக்கு ஒரு பாதுகாப்பு உள்ளது.

அதேபோல் எல்லா மாநிலங்களிலும் இந்து அறவாரியம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் தேசிய ரீதியில் மலேசிய இந்து அறவாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

தேசிய அளவில் அத்தகைய அறவாரியம் அமைந்தால் கோவில்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காண முடியும்.

ஆகவே மலேசிய இந்து அறவாரியம் அமைய மடானி அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை