
“டிரம்ப் ஆட்சி குறித்து…”
என்றேன்
“மதம் – இனம் – பொருளாதாரம்
இந்த மூன்றையும்
அந்நியர்களின் அழிப்பிலிருந்து
காப்பாற்றுவதே என் லட்சியம்
என்ற அவரது கொள்கையை
அமல்படுத்தும் அமளியால்
கொந்தளிப்பில் இருக்கிறது நாடு
தமக்குப் பாதுகாப்பு
அமைப்புகள் வேண்டும்
என்ற மனநிலைக்கு
அமெரிக்க வாழ் இந்தியர்கள்
ஆட்படுகிறார்கள்
இந்தியர்களுக்கு ஆபத்து
டிரம்ப்பா? AI தொழில்நுட்பமா?
என்ற கேள்வி
அச்சத்தோடு அலைகிறது”
“சரி;
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகளை
எப்படி அனுமானிக்கிறீர்கள்?”
இப்போதிருக்கும் கூட்டணிகள்
எதிர்பாராத மாற்றங்களின்றி
இப்படியே நீடித்தால்
தி.மு.க மீண்டும்
ஆட்சிக்கு வருவதற்குக்
கொஞ்சம் கூடுதல்
வாய்ப்புகள் உள்ளதாக
அனுமானிக்கிறேன்..”
“சமூக விஞ்ஞானப்படி
சொல்ல முடியுமா?”
“ஒன்று – பிம்பம்
ஸ்டாலின் நல்லவர்
என்ற பிம்பம்
நாட்டில் பரவலாக நிலவுகிறது
இரண்டு – நம்பிக்கை
நிலைத்த கட்சியாக,
நீடித்த திட்டங்கள்
கொண்ட கட்சியாகத்
தி.மு.க கணிசமாக
நம்பப்படுகிறது
மூன்று – உழைப்பு
ரசிகர்களுக்கும்
தொண்டர்களுக்கும்
வேறுபாடு உள்ளது.
தி.மு.க தொண்டர்கள்
அனுபவம் மிக்க
உழைப்பாளிகள்”
சற்றுநேரம் இருவரும்
சொற்களின்றிப்
புன்னகைத்துக்கொண்டே
இருந்தோம்
- வைரமுத்து


