Monday, May 25, 2026

அன்வாருக்கு எதிராக ஐந்து எம்பிக்கள் வழக்கு: தள்ளுபடி செய்ய அரசத் தரப்பு முயற்சி! -கார்த்திகேசன் சண்முகம்!!

பிரதமர் அன்வார் இப்ராகிம், சட்டத்துறை தலைவர், மத்தியக் கூட்டரசு ஆகிய மூன்று தரப்பினருக்கு எதிராக 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடுத்த வழக்கை தள்ளு-படி செய்யும் முயற்சியில் தேசிய சட்டத்துறை அலுவலகம் ஈடுபட்டுள்ளது என்று ஐந்து எம்பிக்கள் சார்பில் வழக்கை நடத்துகின்ற கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்

கடந்த 2025 அக்டோபர் மாத ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் பொழுது, அமெரிக்க அதி-பர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் அன்வார் இப்ராகிம் செய்து கொண்ட ஏஆர்டி- வர்த்தக ஒப்பந்தம் அரசியல் சாசனத்திற்கு முரணா-னது என்றும் நாட்டின் இறையாண்மைக்கு களங்கமானது என்றும் தெரிவித்து அதற்கு எதிராகஉலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் பின் வாஹிட், கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்துல் பின் அயோப், பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் பின் ஹஷிம், மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வீரா மாஸ் எர்மியாத்தி, ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் காலிப் பின் அப்துல்லா ஆகிய ஐந்து எம்பிக்களும் தொடர்ந்த வழக்கு இன்று, பிப்ரவரி 23-ஆம் நாள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்கு இடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துவரும் வர்த்தக – சுங்க வரி அமெரிக்க சட்டப்படி செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்ப-ளித்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்-பில் மேலும் சில கோரிக்கைகளையும் விளக்கத்தை இணைக்க வேண்டி இருப்ப-தால் வழக்கை மறு தேதிக்கு ஒத்திவைக்-கும்படி கார்த்திக் ஷாண் நிறுவனத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அமர்வில் சிங் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதன் தொடர்பிலான மனுவை சாரவு செய்யும்படி கார்த்திக் ஷாண் நிறுவனத்திற்கு உத்தர-விட்டார்.

கார்த்திகேசன் சண்முகத்துடன் பெர்சத்துக் கட்சியின் சட்ட ஆலோசகர் ரஃபிக் ரஷிட், நிஸாம் ஆகியோரும் முன்னிலை ஆகினர்.

இந்த வழக்கின் தன்மை, நாட்டின் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மலேசிய வழக்கறிஞர் மன்றமும் இந்த வழக்கில் ‘நீதித் துறை நண்பன்’ என்ற வகையில் தன்னை-யும் இனைத்துக் கொள்ள முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் சார்பில் அதன் உதவித் தலைவர் ஆனந்தராஜ் பால சுப்பிரமணியன் முன்னிலை ஆனார்.

தொடர்ந்து வாதாடிய அரசத் தரப்பு, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை மனுவை சார்வு செய்ய விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தேசிய சட்டத்துறை சார்பில் முன்னிலை-யான வழக்கறிஞர் அஃபிசாவின் கோரிக்-கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி அமர்வில் சிங், இதன் தொடர்பில் மார்ச் மாதம் 16-ஆம் நாள் உரிய மனுவை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டதுடன், அதேநாளில் இந்த வழக்கு தொடரும் என்றும் அறிவித்ததார்
.
ஹிண்ட்ராஃப்-எம்ஏபி சட்ட ஆலோசகருமான கார்த்திகேசன் சண்முகம் நீதிமன்ற வளாகத்-தில் செய்தியாளர்களிடம் மேற்கண்ட விவரங்களை இன்று தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை