Wednesday, April 15, 2026

ஆலய சிக்கல்: டத்தோ சிவனேசன் தலைமையில் சிறப்புக்குழு! ரிஷிக்குமார் வரவேற்பு!!

பேரா மாநிலத்தில் உள்ள ஆலய பிரச்சனைகளுக்கு அரசு ரீதியிலான தீர்வுகளை மேற்கொள்ள மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்(மாநில அமைச்சர்) டத்தோ சிவனேசன் தலைமையில் குழு அமைந்துள்-ளதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் வர-வேற்று பாராட்டுகிறது என அதன் தேசியத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு கூறினார்.

கடந்த வாரம் பேரா மாநில அரசு அதன் ஆட்சிக்குழு கூட்டத்தில் இப்பிரச்சனைக்-கான தீர்வுகளை ஆராய்ந்து முடிவெடுக்க டத்தோ சிவனேசனுக்கு முழு ஒப்புதல் வழங்கியுள்ளதை எண்ணி மகிழ்ச்சி-யடைவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் ஆலயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஊராட்சி மன்றங்கள் முதலில் டத்தோ சிவனேசனை கலந்தா-லோசித்த பின்பே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என ஆட்சிக்குழு முடிவெடுத்து 15 ஊராட்சி மன்றங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத் தக்கது.

அண்மையில் பிரதமர் கூறியுள்ளபடி ஆலயப் பிரச்சனைகளை கையாளும்போது இரண்டு வசயங்களை கவனிக்க வேண்டும். அதாவது அந்த ஆலயத்தின் உண்மை வரலாறு; நிலப் பதிவுச் சட்டம் ஆகிய இரண்டின் அடிப்படை-யில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் ஆலயப் பிரச்சனை-களுக்கு அரசியல் ரீதியாகவும் நிலச்சட்டத்-தின்படியும் தீர்வு காண சிவநேசன் மேற்-கொள்ளும் முயற்சிகளுக்கு இந்துதர்ம மாமன்றம் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவதாக ரிஷிகுமார் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் உள்ள இந்திய ஆட்சிக்-குழு உறுப்பினர்களும் இதனைப் பின்பற்றி குழு அமைத்து அரசு ரீதியில் தீர்வு காண வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் இப்-பிரச்சனைகளை எளிதாகக் கையாளலாம். இதனை மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முன்-னெடுப்பார்கள் என பெரிதும் எதிர்-பார்ப்பதாக வ. ரிஷிக்குமார் மேலும் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை