
கோலாலம்பூர் பிப் 24-
பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களைச் சார்ந்த விவகாரங்களில் சிலர் தலையிட்டு இனவாத உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என்று செனட்டர் டாக்டர் அ. லிங்கேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
இந்து கோவில்கள் தொடர்பான பிரச்சினை-கள் மிகவும் நுணுக்கமானவை என்பதால், அவற்றை பொறுப்புடனும் அமைதியைப் பேணும் வகையிலும் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், கோவில்கள் குறித்து தேவையற்ற தலையீடுகள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், அரசியற்கூறு அல்லது இன அடிப்படையிலான தூண்டுதல், இந்த விவகாரங்களில் இருக்கக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் மூலம் சரியான முறையில் ஆலயப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டாட்சி மட்டத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின்கீழ் ஒரு தேசிய இந்து அற வாரியத்தை நிறுவ வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
“அனைத்து பாரம்பரிய கோயில்களையும் அதில் சேர்க்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
பினாங்கு இந்து அறவாரியத்தை(PHEB)-ஐ
அடிப்படையாகக் கொண்டு அவர் இதைப் பரிந்துரை செய்தார்.


