- ரிஷிகுமார் வரவேற்பு!!

பேரா மாநிலத்தில் உள்ள ஆலய பிரச்சனை-களுக்கு அரசு ரீதியிலான தீர்வுகளை மேற்கொள்ள மாநில ஆட்சிக் குழு உறுப்பி-னர்(மாநில அமைச்சர்) டத்தோ சிவனேசன் தலைமையில் குழு அமைந்துள்ளதை மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்று பாராட்டுகிறது என அதன் தேசியத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு கூறினார்.
கடந்த வாரம் பேரா மாநில அரசு அதன் ஆட்சிக்குழு கூட்டத்தில் இப்பிரச்சனைக்-கான தீர்வுகளை ஆராய்ந்து முடிவெடுக்க டத்தோ சிவனேசனுக்கு முழு ஒப்புதல் வழங்கியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடை-வதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் ஆலயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஊராட்சி மன்றங்கள் முதலில் டத்தோ சிவனேசனை கலந்தா-லோசித்த பின்பே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என ஆட்சிக்குழு முடிவெடுத்து 15 ஊராட்சி மன்றங்களுக்கும் கடிதம் அனுப்பப்-பட்டுள்ளது மிகவும் வரவேற்கத் தக்கது.
அண்மையில் பிரதமர் கூறியுள்ளபடி ஆலயப் பிரச்சனைகளை கையாளும்போது இரண்டு வசயங்களை கவனிக்க வேண்டும். அதாவது அந்த ஆலயத்தின் உண்மை வரலாறு; நிலப் பதிவுச் சட்டம் ஆகிய இரண்டின் அடிப்படை-யில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் ஆலயப் பிரச்சனை-களுக்கு அரசியல் ரீதியாகவும் நிலச்சட்டத்-தின்படியும் தீர்வு காண சிவநேசன் மேற்-கொள்ளும் முயற்சிகளுக்கு இந்துதர்ம மாமன்றம் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவதாக ரிஷிகுமார் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களில் உள்ள இந்திய ஆட்சிக்-குழு உறுப்பினர்களும் இதனைப் பின்பற்றி குழு அமைத்து அரசு ரீதியில் தீர்வு காண வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் இப்-பிரச்சனைகளை எளிதாகக் கையாளலாம். இதனை மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முன்னெடுப்-பார்கள் என பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக வ. ரிஷிக்குமார் மேலும் குறிப்பிட்டார்.


