
2022 பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்ய-உக்ரேனிய போர், இன்று ஐந்தாவது ஆண்டை எட்டுகிறது.
கோர்பசேவ்முன்னெடுத்த தாராளக் கொள்கையின் அடிப்படையில், அந்த சோவியத் சோசலிச ஒன்றியக் குடியரசில் இருந்து தனியாட்சி உரிமையுடன் பிரிந்த நாடுகளில் உக்ரேனும் ஒன்று.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடை-பெறும் சண்டையைப் போன்ற இந்தப் போர், பிராந்திய மோதலைக் கடந்து, உலகளாவிய புவியியல் அரசியல் அமைப்பையே மாற்றியமைத்த ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த மோதல் இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினையாக மட்டும் அல்ல; பாதுகாப்பு கட்டமைப்பு, ஆற்றல் சமநிலை, பொருளாதாரம், மேற்கத்திய உலகின் அரசியல் நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு பரந்த அரசியல் மோதலாக மாறியுள்ளது.
அடிப்படையில், இந்தப் போரின் வேர்கள், சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்குப் பிந்தைய பாதுகாப்புக் கட்டமைப்பில் ஊடுறுவி உள்ளது. தவிர, இதன் புற விளைவாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேற்கத்திய கூட்டணியுடன் இணைந்தது, ரஷ்ய அதிபர் புடினுக்குஅச்சத்தை ஏற்படுத்தியது.

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, தனது பாதுகாப்பு எல்லைகளில் மேற்கத்திய இராணுவப் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறி நடவடிக்கை எடுத்தது. மறுபுறம், விளாடிமிர் செலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன், தேசிய சுயாட்சி மற்றும் சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது.
உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் மையம் கொண்டுள்ள இந்தப் போர், கருங்கடல் கடற்பாதை மீதான இராணுவ கட்டுப்பாட்டின் முக்கியத்-துவத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது.
20-ஆம் நூற்றாண்டில் நீண்ட காலமாக தொடர்ந்த ஈரான்-ஈராக்கியப் போரைப்போல, இந்த நூற்றாண்டிற்கான நீண்ட காலப் போராக இது உருவெடுத்துள்ளது. தவிர, இந்தப் போர் உலக அரசியல் கூட்டணி-களைத் தெளிவாகப் பிளவுபடுத்தி உள்ளது.

நேட்டோ அமைப்பில் உறுப்பியம் பெற முயன்றதால் உக்ரேனுக்கு எதிராக எடுக்கும் இராணுவ நடவடிக்கையேத் தவிர, இது போர் அல்லவென்று தொடக்கத்தில் புடின் கூறி-னாலும், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் ரஷ்யாவைச் சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்-தின் வெளிப்பாடுதான் இந்தப் போர்.
எது எவ்வாறாயினும், நேற்றுடன் முடிவ-டைந்த இந்த 4 ஆண்டு காலப் போரில், நேட்டோ அமைப்பு உக்ரேனுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி உள்ளதுடன் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகளையும் வழங்கி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் தன் பங்கிற்கு ரஷ்யா மீதான பொருளாதார தடை அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கிறது. பல் இல்லாத ஐநா மன்றமோ, மனிதாபிமான உதவி, தூதரக அளவிலான முயற்சி என்றமட்டில் தன்னை வரையறுக்கொண்டுள்ளது. ரஷ்யா நிரந்தர உறுப்பியம் பெற்றுள்ள் ஐநா பாதுகாப்புக் குழு மற்றும் அரசியல் வேறு-பாடுகள் காரணமாக ஐநா மன்றத்தின் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மோதல், உலக பொருளாதாரத்தில் மூன்று முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது:

எரிசக்தி சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தில் மாற்றம்; உணவுப் பாதுகாப்பு சவால், தானிய ஏற்றுமதி பாதிப்பு, பாதுகாப்புச் செலவு உயர்வு, இராணுவ செலவினங்கள் அதிகரித்துள்ளமை ஆகிய விளைவுகளை உலக நாடுகள், குறிப்பாக மேலையுலக நாடுகள் எதிக்ரொள்கின்றன.
இந்தப் போரின் விளைவாக எழுந்துள்ள உலகளாவிய பணவீக்கம்தான் பன்னாட்டு வர்த்தகத்தில் அதிக பாதிப்பை எற்படுத்தி-யுள்ளது.
விடாக் கண்டன்-கொடாக் கண்டனைப் போல ரஷ்யாவும் உக்ரேனும் சளைக்காமல் முன்னெடுக்கும் இந்தப் போரினால், மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.

உக்ரேனைப் பொறுத்தவரை நகர கட்டமைப்பு, கல்விவாய்ப்பு- கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி உள்ளிட்ட யாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போர், இராணுவ மோதலைத் தாண்டி, மனிதாபிமானத்தை புறாக்கனித்து, சமூக அமைப்பை சீர்குலைக்கும் பேரழிவாகவும் மாறியுள்ளது.
ரஷ்ய-உக்ரேனிய சண்டை, ‘தகவல் போரின்’ முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்து-கிறது;. போர் முனையில், சமூக ஊடகங்கள் மூலம் உருவாக்கப்படும் கருத்து வடிவமைப், ஊடக அறத்தைமீறி, சில வேளைகளில் பொய்யாகவும் கட்டமைக்கப்படுகிறது.
உலகளாவிய பொதுமக்கள் மனநிலையைப் பாதிக்கும் பரப்புரை, இணையத் தாக்குதல், டிஜிட்டல் உளவு நடவடிக்கை யாவும் நவீன போர்முனையில், முக்கிய ஆயுதங்களாக உருமாறியுள்ளன.

இந்தப் போரின் முடிவு குறித்து மூன்று முக்கிய சாத்தியக்கூறுகள் பேசப்படு-கின்றன:
போர்நீடிப்பு(Frozen conflict), அமைதிப் பேச்சுமூலம் மண்டல சமரசம், விரிவான பாதுகாப்பு ஒப்பந்தங்களுடன் புதிய ஐரோப்பிய பாதுகாப்பு மன்றம் உருவாதல் போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன.
எந்த முடிவாக இருந்தாலும், இந்த மோதல் உலக அரசியல் அமைப்பை நிரந்தரமாக மாற்றிய நிகழ்வாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
மொத்தத்தில், ரஷ்ய-உக்ரேனிய போர், ஒரு பிராந்திய இராணுவ மோதல் மட்டுமல்ல; சக்தி சமநிலை, தேசிய பாதுகாப்பு, பொரு-ளாதார பரஸ்பர சார்புநிலை, பன்னாட்டு போர்ச் சட்டத்தின் எதிர்காலம் உள்ளிட்ட அம்சங்களை தன்னகத்தேக் கொண்டு நீடிக்கிறது.


