Sunday, May 3, 2026

துணைப் பிரதமர்1,000 மாணவர்களுக்கு கல்வி நிதி – உயர்க்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி!

துணைப் பிரதமர்
1,000 மாணவர்களுக்கு கல்வி நிதி – உயர்க்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி!

அம்னோ – தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான
டத்தோஸ்ரீ முனைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று தமிழ்ப் பள்ளி மாணாக்கர் 1,000 பேருக்கு கல்வி உதவி நிதியும் உயர்க் கல்வி மாணவர்கள் 10 பேருக்கு மடிக் கணினியும் வழங்கினார்.

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று மிகப்பெரிய அளவில் பாகான் டத்தோ சிம்பாங் அம்பாட் டத்தோ ஹாஜி அப்துல்லா அமாட் மண்டபத்தில் நடைபெற்றது.

துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் இந்திய சமூக அதிகாரி அர்விந்த் அப்பளசாமி ஏற்பாட்டில் இந்த விழா சிறப்பாக நடந்தேறியது.

அகமட் ஜாஹிட் ஹமிடி மண்டபத்திற்கு வந்தபோது இந்திய மாணவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை நல்கினர்.

பாலர் பள்ளி பாடசாலையை சேர்ந்த 200 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளியும் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 691 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளியும் கல்வி நிதியாக வழங்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது முறையாக பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கப்படுகிறது என்று அரவிந்த் அப்பளசாமி தெரிவித்தார்

பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் 14 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன.

இந்த 14 தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தலா 2,000 வெள்ளி என நிதியுதவி வழங்கப்பட்டது.

பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.

இனம் மதம் பார்க்காமல் அனைத்து மக்களையும் அரவணைத்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சேவையாற்றி வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்திய மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மிகப்பெரிய அளவில் உதவி வழங்கி வருகிறார் என்று அரவிந்த் அப்பளசாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்வில் ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னதம்பி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பெற்றோர், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை