Thursday, March 19, 2026

பிறந்த நாள் சிந்தனையும் செயலும்!தாயினும் மேலான பரிவு!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மார்ச் 1-ஆம் நாள், 74-ஆவது அகவையை எட்டும் முகமாக, 73-ஆவது பிறந்த நாளை, சமூகவெளியில் கொண்டாடி, சமதருமப் பாதையில் குதூகலிக்கிறார்.

இன்றைய தன் பிறந்த நாள் தொடர்பில், நேற்று பிப்ரவரி 28-ஆம் நாள், சென்னை சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அனிச்சல்(இனிப்ப அப்பம்) வெட்டி, மாணாக்கருக்கு ஊட்டினார்.

தொடர்ந்து அதேப் பள்ளி மாணாக்கர்களுக்கு உணவும் பரிமாறினார். இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு, திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திமுக பகுதிச் செயலாளர் அன்புதுரை, திமுக செயற்குழு உறுப்பினர் வி.எஸ். ராஜ், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியின் மேநாள் முதன்மை அருட்சகோதரி சவேரியா, இந்நாள் முதன்மை அருட்சகோதரி ரோஸ்லைன், தாளாளர் அருட்சகோதரி ஜெம்மா, பள்ளி முதல்வர் அருட்சகோதரி பெர்பைன், தலைமை ஆசிரியர் திருமதி நிருமலா ராணி, பள்ளி நிருவாகியர்,ஆசிரியப் பெருமக்கள், திமுக நிருவாகியர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை