Thursday, April 2, 2026

செமினியில் இன்று உலக தாய்மொழி நாள் விழா! -‘சமூகக் காவலர்’ டத்தோ சகாதேவன் தலைமை!!

செம்மை என்னும் பெயரில் பரந்த அளவில் சமூகப் பாங்குடன் செமினி வட்டாரத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற புலனக் குழுவினர் ஏற்பாட்டில் இன்று மார்சி திங்கள் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணி அளவில் தாய்மொழி நாள் விழா நடைபெறுகிறது.

செம்மை அமைப்பின் புரவலரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிருவாக தலைமை இயக்குநரும்-செயலரும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியச் செயலரும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-பண்பாட்டு அறவாரியச் செயலரும் எல்லாவற்றுக்கும் மேலாக மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாவகையில் சமூகக் காவலராகத் திகழும் டத்தோ பா.சகாதேவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

செமினி ரிஞ்சிங் தோட்ட ஆருள்மிகு மாரியம்மன் வளாக மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று ‘செம்மை’க் குழுவின் தலைவர் ‘வெஸ்ட்’ செல்வராஜ் அறிவித்துள்ளார்.

செமினி வட்டாரத்தில் இயங்குகின்ற ‘பன்முக தமிழ்ச் செல்வர்’ நா.ஆ.செங்குட்டு-வன் அறிவுச் சோலை’ என்னும் நூலகத்தின் ஏற்பாட்டில் இந்த உலக தாய்மொழி நாள் விழா பரந்த அளவில் நடைபெற இருக்கிறது.

செமினி ரிஞ்சிங் தோட்ட ஆருள்மிகு மாரியம்மன் ஆலயம், செமினி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம், செமினி இந்திய சமூகத்தலைவர் மன்றம், ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், செந்தூல் இந்தியர் வாலிப சங்கம், கோ.சாரங்கபாணி தமிழ் எழுச்சி மன்றம், புத்ரா ஜெயா இமயம் அமைப்பு, செந்தூல் முத்தமிழ் படிப்பகம், பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், புத்ராஜெயா-சைபர்ஜெயா இந்தியர் சங்கம், காஜாங் ‘அறம் செய்வோம்’ இயக்கம், செமினி இந்து சங்கம், AMSA இயக்கம், Bahau SM Datuk Mansor முன்னாள் மாணவர்கள், பகாவ் கெடிஸ் தோட்ட தமிழ்-தெலுங்கு பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், Intelek Transformasi Cakna டியூசன் மையம், செமினி வட்டார சமூக இயக்கங்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

செம்மை அமைப்பின் செயலாளர் ச. குணசேகரன் வழிநடத்த இருக்கும் இந்த நிகழ்ச்ச்சி, காலை நிகழ்ச்சி-பிற்பகல் நிகழ்ச்சி என இரு அங்கங்களாக நடைபெற உள்ளது.

காலை நிகழ்ச்சி சிறுவர்களுக்கான நிகழ்ச்சியாகவும் பிற்பகல் நிகழ்ச்சி இலக்கியச் சாறலுடனும் நடைபெற உள்ளது;

சம்பா நாட்டு இளவரசி நூலாசிரியர் மதியழகன், மலாயா கணபதி நூலாசிரியர் சிவா லெனின், தமிழர் த்டங்கல் நூலாசிரியர் சீ.அருண், ஜானகி ராமன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி ‘வெஸ்ட்’ செல்வராஜ் கேட்டுக் கொள்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை