
மலேசியர்கள் அண்மைய சில வாரங்களாக, ‘அரசாங்கத்தை கவிழ்க்க ரகசிய (சயோனிஸ்ட்-Zionist) சக்திகள் முனைப்பு; வெளிநாட்டு முகவர்கள் ஈடுபாடு;, ஊடகப் பிரிவுகள் இணைந்து சதி என்றெல்லாம் திடீர் திடீரென அச்சமூட்டும் தகவலை எதிர்கொண்டு வருகின்றனர் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி-MAP தலைவர் பொன். வேதமூர்த்தி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இத்தகைய புனைகதையை தொடர்ந்து பெரிதாக்கி, சமூக ஊடகத்தில் பரப்பி, மக்கள் மனதில் பயமும் சந்தேகமும் தொடர்ந்து விதைக்கப்படுகின்றன.
“ஏன் இப்போது மட்டும் இப்படிப்பட்ட செய்தி-கள் திடீரென பரப்பப்படுகின்றன?” என்னும் கேள்வியை மக்கள் எழுப்ப வேண்டும் என HINDRF தலைவருமான பொன். வேத மூர்த்தி வலியுறுத்துகிறார்.
பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் கோவில் பிரச்சினை, பன்றி வளர்ப்பு சிக்கல் போன்ற விசயங்களில் கோபத்தையும்ம் பிளவையும் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டார்.
இதனால், மலாய், இந்திய, சீன சமூகங்-களுக்கிடையே பதற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மக்கள் ஏற்கெனவே மடாணி அரசாங்கத்தின் ஊழல், தொடர்ச்சி-யான சர்ச்சைகள் காரணமாக விரக்தி அடைந்துள்ளனர். இதன் விளைவாக ‘Turun Anwar’ இயக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
பிரதமர், மக்களின் உண்மையான கோபத்தை எதிர்கொள்ள துணிவின்றி, கற்பனையான எதிரிகளை உருவாக்கி பயத்தை விதைத்து தன் அரசியல் நிலை-யையும் பதவியையும் உறுதிப்படுத்த முயல்கிறார்.
அரசியல் சதி கதைகள், சயோனிஸ்ட் சக்திகள், வெளிநாட்டு முகவர்கள் என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றன;
உண்மையில்,
ஊழல், அரசியல் தவறுகள், அரசியல் சாசன புறக்கணிப்பு, ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பும் பம்மாத்தும் தந்திரமும்தான் இவை.
பிரதமர் அன்வார், டொனால்ட் டிரம்ப்- உடனான ஏ.ஆர்.டி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், மாமன்னர், ஆட்சியாளர் மன்றம், நாடாளுமன்றம், அமைச்சரவை ஆகிய கட்டமைப்புகளை புறக்கணித்து தன்னிச்சையாக கையெழுத்திட்டது, அரசியல் சாசன அத்துமீறளாக கருதப்படுகிறது.
கூட்டரசு அரசியலமைப்புச் சாசனத்திற்கு களங்கம், மலேசிய இறையாண்மைக்கு இழுக்கு ஆகிய இரண்டையும் ஒருசேர அன்வார் ஏற்படுத்தி இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதனால் மிரட்சிக்கு ஆளான அன்வார், அதை சமாளிக்கும் விதமாக இப்பொழுது “ட்ரம்புடனான ஒப்பந்தம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று கூறும் நொண்டி சமாதானமும் சமாளிப்பும் பிரச்சினைக்கு தீர்வாகாது; மாறாக, முரணானது” என சட்ட வல்லுனருமான பொன். வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரைச் சுற்றியுள்ள ஊழல் மற்றும் சர்ச்சைகள் குறித்து பன்னாட்டு ஊடகங்கள், குறிப்பாக Bloomberg- கிழித்து தொங்கவிடும் விதமாக வெளியிட்ட தகவல், தற்போதைய தலைமையின் மிகக் கடுமையான ஊழல் பிரச்சினைகளில் ஒன்றாகும் என்று மேனாள் அமைச்சர்ருமான பொன் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


