Thursday, April 2, 2026

இந்தியாவின் சட்டத்துறை தலைவர் ஆர். வெங்கட்ரமணி சந்திப்பு: நாளை இரவு சீன அசெம்பிளி மண்டபத்தில்! -அனைவரும் அழைக்கப்படுகின்றனர்!!

வல்லரசு நாடாக வளர்ந்துவரும் இந்தியாவின் தற்போதைய சட்டத்துறை தலைவர்-அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ட ரமணி மலேசியாவிற்கு வருகை தர இருக்கிறார்.

புதுடில்லியில் தமிழ் பேசும் உயர் அதிகாரிகளில் ஒருவரான இவர் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் மூன்றாம் நாள் இரவு 7:45 மணி அளவில் கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

பன்னாட்டு மனித உரிமை பாதுகாப்பு அமைப்பின்(HRDI) தலைவராக 2014 முதல் 22 ஆம் ஆண்டு வரை இவர் செயல்பட்டதுடன் மனித உரிமையை நிலை நாட்டுவதில் துணிவுடனும் சமூக பாங்குடனும் செயல்பட்டவர்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேசியாவில் அரசியல், ஆன்மிக, சமூக, பொருளாதார நிலைசார்ந்து உரிமைகுரல் எழுச்சியுடன் எழுந்த நேரத்தில் மலேசியவாழ் இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் வெங்கட்ட ரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, சட்ட வல்லுநர் பொன் வேதமூர்த்தியும் HRDI அமைப்பில் வெங்கட்டரமணியுடன் இணைந்து பன்னாட்டு மனித உரிமை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த காலகட்டத்தில், குறிப்பாக 2007 முதல் 2022 ஆம் ஆண்டுவரை மலேசிய இந்திய சமுதாயத்தின் மனித உரிமை தொடர்பான பிரச்சனை குறித்தும் பல கூட்டங்களில் பொன் வேதமூர்த்தி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன் வேத மூர்த்தியும் கார்த்திக் ஷாண் வழக்கறிஞர் நிறுவனத்தின் நிறுவனர்
கார்த்திகேசன் சண்முகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரத்திற்கு தினேஷுடன்(012-6640885) தொடர்பு கொள்ளலாம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை