Thursday, April 2, 2026

திருவாரூரில் தேர்தல் பரப்புரை தொடக்கம்! -மு க ஸ்டாலின் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி அதிரடி முழக்கம்!!

“தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கான பரப்புரையை தொடங்குகிறேன்”.

தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது;. அந்த பெருமிதத்தோடு தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களோடு மக்களான உங்களை சந்திக்க உங்கள் ஸ்டாலின் இன்று திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

இந்தத் தேர்தல் என்பது, தமிழ்நாட்டுக்கும் புது டெல்லிக்குமான தேர்தல்; திமுக கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்குமான தேர்தல்!

தமிழ்நாட்டை தொடர்ந்து தற்காக்க வேண்டுமென்றால் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபயில வேண்டுமென்றால் திமுகவே ஆட்சியில் தொடர வேண்டும்.

தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால், பாஜக – அதிமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்.
வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இன்று களத்தில் நிற்பது திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல; திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் வெற்றிக்காக மட்டும் அல்ல;

இது,, தமிழ்நாட்டுக்கான வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த மண்ணின் மைந்தனாக கேட்கிறேன்; கலைஞரின் மகனாகக் கேட்கிறேன்; உங்களின் பொன்னான வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு வழங்க வேண்டும். ஏப்ரல் 23ஆம் நாள் வாக்களிக்க போகும்போது நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

தமிழர் நலனை அடியோடு புறக்கணிக்கும் என் டி ஏ சந்தர்ப்பவாத கூட்டணியா அல்லது தமிழ் நலம் சார்ந்து இனம் சார்ந்து முன்னேற்ற திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வரும் திமுக தலைமையிலான கூட்டணியா என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன்! உங்கள் சூரியன்,!!

வெல்வோம் ஒன்றாக!!! என்று தி மு க தலைவர் மு க ஸ்டாலின் முழங்கினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை