
மலேசிய தமிழ்க் கலை உலகில் தன்னை நீண்ட காலமாக இணைத்துக் கொண்டவரும் ‘டெலி ஸ்டார்’ நிருவனத்தின் நிறுவனருமான எஸ்.பி. மணிவாசகம் தயாரிப்பிலும் பூச்சி இரவி இயக்கத்திலும் ‘உறவுகள்’ என்னும் சமூக மேடை நாடகம் க்டந்த ஒரு வாரமாக தலைங்கரத்து டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த் வரிசையில் நேற்று வியாழக்கிழமை 5-ஆம் நாள் நாடகம் மஇகா சார்பில், குறிப்பாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் ஆதரவில் நடைபெற்றது.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்; நிலத்தில் மேடு-பள்ளம் இருப்பதைப் போல வாழ்விலும் ஏற்ற-இறக்கம் இருக்கத்தான் செய்யும்; குறிப்பாக மனைவி-கணவன் என்றால், ஏராளமான சிக்கல் வாழ்க்கைப் பயணத்தில் எழும் என்பது உண்மைதான்.
அவ்ற்றை எதிர்கொண்டு, சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை. இதைப் புரிந்து கொள்ளாமல், தங்கள் இருவருக்கும் இடையில் சிக்கல் எழுந்தால், மணவிலக்கு ஒன்றுதான் தீர்வு என்று ஓர் இணையர் எடுக்கும் முடிவினால், தங்கள் பிள்ளைகளும் பிரிய நேர்கிறது.

இப்படிப் பிரிந்த ஓர் அண்ணனும் ஒரு தங்கையும் வளர்ந்தபின், தங்களின் மூலம் அறியாமல் எதிர்காலத்தில் காதலர்களாக உருமாறும் அவலத்தையும் மணவிலக்கின் பின்விளைவையும் காட்சிப்படுத்துவதுதான் இந்த உறவுகள் மேடை நாடகத்தின் மையக் கரு.
நேற்றைய நாடகத்தில், மஇகா தேசியத் தலைவர் சார்பாக அதன் பொதுச் செயலர் டத்தோ ஆனந்தன், கட்சியின் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சியினருடன் சிறப்புப் பிரமுகர்கள், கலை ஆர்வளர்கள், பொது மக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.


