
கோலாலம்பூர் மார்ச் 9-
நாட்டில் இனங்கள் இடையே பிளவை ஏற்படுத்திவரும் ஷம்ரி வினோத் உட்பட ஐவர்மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய பன்னாட்டு மனிதநேய சமூக நல அறவாரியத்தின் தலைவர் டத்தோ இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
அதேசமயம் நாட்டில் இனங்கள் இடையே அச்சத்தையும் கலவரத்தையும் தூண்டும் வகையில் ஷம்ரி வினோத் உட்பட ஐவர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இவர்கள்மீது ஏராளமான புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் கோட்பாடுகளை அனைவரும் மதிக்க வேண்டும். மற்ற மதங்களையும் மதிக்க வேண்டும்.
ஆனால் இந்த வினோத் காளிமுத்துவின் அட்டகாசம் எல்லையை தாண்டிவிட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோவில் விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதில் தலையிட நீ யார் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ஷம்ரி வினோத் உட்பட ஐவர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதற்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் சட்ட முறைப்படி அமையாத ஆலயங்-கள், குறிப்பாக சொந்த நிலத்தில் இல்லாத வழிபாட்டுத் தலங்கள், அதைப்போல நிர்-வாக சீர்மை இல்லாத ஆலயங்கள் யாவும் ஒருங்கிணைக்கப்படும் என்றும் இதன் தொடர்பில் மத்திய மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படப் போவதாகவும் டத்தோ ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சில ஆலயங்களில் அன்றாடம் வழிபாடு நடைபெறுவதில்லை; இன்னும் சில ஆலயங்களில் வாரத்திற்கு ஒரு முறை பக்தர்கள் சென்று வருகின்றனர்; வேறு சில ஆலயங்களில் மாதத்திற்கு ஒருமுறை எனவும் வேறுசில ஆலயங்களில் ஆடு வெட்டி பூசை நடந்தால் அந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் வருகின்றனர்.
இன்னும் சில ஆலயங்கள் புல் புதர் மண்டிக் கிடக்கின்ற நிலையெல்லாம் இருக்கின்றன.
இப்படிப்பட்ட ஆலயங்கள் யாவும் ஒருமுகப் படுத்தப்பட்டு சட்ட வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப் படும் என்றும் இதன் தொடர்பில் டத்தோ ராமச்சந்திரனும் அவர்தம் நிர்வாகக் குழுவினரும் தெரிவித்தனர்.


