Thursday, April 16, 2026

ஏழாவது முறையும் நாம்தான்! -முதல்வர் மு க ஸ்டாலின்!!

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்ச-ருமான மு க ஸ்டாலின் நேற்று மார்ச் 9 திங்கட்கிழமை திருச்சிராப்பள்ளி சிறுகனூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “ஏழாவது முறையும் நாம்தான்; இனி எப்போதும் நாம்தான்” என்று முழங்கினார்

திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ் நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்பு-களின் திருமுகங்களில் கண்டு நானும் எழுச்சி கொண்டேன் என்றார்.

அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்-தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது.

வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்!

தமிழ் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக வெல்வோம்; ஒன்றாகவே வெல்வோம் என்று திராவிட மாடல் ஆட்சியின் நாயகரான மு க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

இம்மாநாட்டில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே என் நேரு, இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கா. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைக் கழக நிர்வாகியர், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற- சட்டமன்ற முன்னாள்-இந்நாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை