Saturday, April 18, 2026

அரசியலில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படுகின்றனரா? -தான்ஸ்ரீ குமரன்

கோலாலம்பூர் மார்ச் 11)
ஊடகவெளியில் பரவும் புதிய தகவல், இந்திய-இந்து சமுதாயத்தினரை அதிர்ச்சிக்-குள்ளாகி இருப்பதாக மூத்த தலைவர் தான்ஸ்ரீ க. குமரன் கவலை தெரிவித்து உள்ளார்.

நாட்டில் என்ன நடக்கிறது?. காவல்துறை என்ன செய்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அமைச்சரவையில் இந்தியர் இருவர் இருந்தும் இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவதும் இந்துசமயம் இழிவு படுத்தப்படுவதும் தொடர்வது வேதனையளிப்பதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் வழக்க-மாக ஓர் இந்திய உறுப்பினருக்கு வழங்கப் பட்டு வந்த வாய்ப்பு இம்முறை மடானி அரசாங்கத்தால் மறுக்கப்பட்டிருப்பது, மாநகர்மன்ற உறுப்பினராகும் தகுதி இந்தியர் யாருக்கும் இல்லையா அல்லது .மதானி அரசாங்கத்தை நம்பி வாக்களித்த இந்தியர்கள் அரசியலில் ஓரங்கட்டப்படு-கின்றனரா என்ற கேள்வியும் எழுவதாக இதன் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலக்கிய படைப்பாளருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களை உடைப்பவர்களுக்கு எதிராக என்ன நாடவடிக்கை எடுக்கப்பட்டி-ருக்கிறது என்று சட்டத்துறை தலவரிடம் அமைச்சர் கோபிந்த் சிங் விடுத்துள்ள வினாவும், பணம் வாங்கிக் கொண்டு நாட்டில் இனக்கலவரங்களை தூண்டும் கும்பல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது என்ற அமைச்சர் இரமணனின் அறிக்-கையை வரவேற்ற அவர், அமைச்சரவை-யில் பேசி தீர்வுகாணவேண்டிய நிலையில் உள்ள இந்தப் பிரச்சினைகளை பொது-வெளியில் பேசுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்துக்களின் புனித சின்னமான திரி-சூலத்தை காலில் போட்டு மிதிப்பவர், அந்தக் காட்சி பதிவு செய்யப்பட்ட கணொளியை வெளியிட்ட இருவர்மீது மட்டுமல்லாமல் இது-போன்ற சமூக-சமய விரோத நடவடிக்கை-களில் ஈடுபடுவோர்மீதும் உடனடி நட-வடிக்கை மேற்கொள்ளும்படி காவல் துறையை மேனாள் துணை அமைச்சரும் ஆசிரியருமான அவர் கேட்டுக்கொண்டார்.

அனுமதி இன்றி நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்-கள் குறித்து பிரதமர் ஊராட்சி துறை அமைச்சுக்கு விடுத்த ஆணையை ஒரு சில சமூக-சமய விரோதிகள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நாட்டில் இன-மத கலவரத்தைத் தூண்டி, அமைதி இன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கின்றனர் என்ற கருத்துப் பரவலையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலய விவகாரம் குறித்து ஆலயங்களும் சமய அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் இதுபோன்று பொறுப்பற்ற செயலில் ஈடுபடுவோரை சொஸ்மா சட்டத்-தின்கீழ் தண்டிக்க காவல் துறை தயங்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டதுடன் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் இந்தியர்-களின் உரிமையை நிலை நிறுத்தும் வகையில் ஓர் இந்தியரை உறுப்பினராக நியமிக்கும் முயற்சியில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மூட்டைக்கட்டி மூலையிலே வைத்துவிவிட்டு, ஒன்றி-ணைந்து செயலிலிறங்குபடி இந்திய அரசியல் கட்சித் தலைவர்களைக் தான்ஸ்ரீ குமரன் கேட்டுக்கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை