Monday, April 20, 2026

திரிசூலத்தை காலால் மிதித்த ஆடவர்மீது கடும் நடவடிக்கை தேவை! -சிவபாலன் போலீஸ் புகார்!

இந்து மதத்தின் புனித சின்னமான திரிசூலத்தை ஒரு நபர் மிதித்து சேதப்படுத்துவதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகங்களில் பார்த்தபோது நான் அதிர்ச்சியும் மிகவும் ஏமாற்றமுமடைந்தேன்.

இந்தச் செயல் இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், நம் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டும் தன்மையையும் கொண்டுள்ளது என்று கெஅடிலான்
கோல சிலாங்கூர் தொகுதித் தலைவர் சிவபாலன் தெரிவித்தார்.

பல இன மற்றும் பல மத சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடித்தளத்தில் மலேசியா கட்டமைக்கப்பட்டது.

இத்தகைய ஒருமைப்பாடுதான் நாட்டின் நல்லிணக்கம் – நிலைத்தன்மை க்கு அடித்தளமாகும்.

இதுசம்பந்தமாக, மதத்தை அவமதிக்கும் பிரச்சினையிலோ அல்லது மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய எத்தகைய முயற்சியிலோ அரசாங்கம் சமரசம் செய்யக் கூடாது.

இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை உடனடி விசாரணை நடத்தி சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும்ஜஅதே நேரத்தில், அனைத்து மலேசியர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், நாட்டின் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக சிவபாலன் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை