
கோலாலம்பூர் மார்ச் 11-
இந்துமதச் சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் நபர்மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் குர்ஆனை அவமதித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது; அதைப்போல இந்தச் செயலும் செயலும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்றார் அவர்.
“பல இனங்களும், மதங்களும் கொண்ட சமூகத்தில், மக்களிடையேயான ஒற்றுமை மிகவும் முக்கியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
“இன, மத வாதங்களை ஏற்படுத்தக்கூடிய எந்த செயலும் தவிர்க்கப்பட வேண்டும். எந்த மதத்தையும் சிறுமைப்படுத்தும், அல்லது அவமதிக்கும் செயலை புரிவோர் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“நிலப் பயன்பாடு, விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்சினைகள் எந்த வகையிலும் இத்தகைய செயல்களை நியாயப்படுத்தாதுஎன்றும் அவர் கூறினார்


