Saturday, April 18, 2026

97-ஆவது வயதில் டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம்!

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே. ஆர். சோமசுந்தரம் இன்று தனது 96வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

மலேசிய இந்தியர்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பாரம்பரிய தலைவரான இவர், 1930இல் இதே நாளில் தெலுக் இந்தான் நகரில் பிறந்தார்.

ஒரு சிறிய கடைக்காரரின் மகனாக பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஆளுமையுடன் திகழ்ந்தவர்.

Made with LogoLicious Add Your Logo App

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ படையில் இளம் பயிற்சியாளராக விளங்கிய இவர், இரண்டாம் உலகப் போரின்போது கல்விப் பயணத்தில் தடையை எதிர்கொண்டார்.

20 வயதில் நிர்வாகப் பதவியை அடைந்து, பின்னர் சிங்கப்பூரில் அசாத் பள்ளியில் போர்ப்பயிற்சி பெற்றார்.

சுதந்திர மலேசியாவில் நிறுவப்பட்ட தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு, வீடமைப்பு, கல்வி, மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடாற்றுபவர்.

மலேசிய இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னலமின்றி உழைத்த தலைவரான டான்ஸ்ரீ கே.ஆர். சோம சுந்தரம், நீண்டகாலமாக தான் தலைமையேற்று வழி நடத்திவரும்
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின்வழி, மொழி வளர்ச்சிக்காகவும் கலை மேம்பாட்டிற்காகவும் தனித்தனியே இரு அருவாரியங்களை அமைத்து மலேசிய இந்திய தொழில் தமிழர்களின் எதிர்கால மீட்சிக்கு தொடர்ந்து பெரும்பாடு அற்றி வருகிறார்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட பிறை கண்டு நூற்றாண்டை எட்ட இருக்கின்ற இந்தத் தலைமகனார்க்கு குமரி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை