Monday, April 20, 2026

தமிழர் திருநாளும் பண்பாட்டு ஒற்றுமையும்!

செ.குணாளன்
2025 சுறவம் திங்கள்

தமிழர்களின் பண்பாட்டை ஒளிரச் செய்யும் மிக முக்கியமான திருநாள் பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு. இது தமிழர்களின் வாழ்க்கை முறையையும், பாரம்பரியத்தையும், இயற்கை நிகழ்ச்சிகளையும் பிரதிபலிக்கும் ஒரு சிறப்பு திருவிழாவாக விளங்குகிறது.

பொங்கல், தமிழர் புத்தாண்டு (திருவள்ளுவர் ஆண்டு ) ஆகியவை சமயம் சார்பு அல்லாத நிகழ்ச்சிகளாகும். எனவே, இவை மதம் மற்றும் கோட்பாடு சார்பில்லாமல் அனைத்து தமிழர்களும் இணைந்து கொண்டாட வேண்டியவை.

தமிழர் திருநாளின் தனிச்சிறப்பு என்னவெனில், இது இயற்கையைப் போற்றி பாரம்பரியத்தையும், விவசாயத்தின் மேன்மையையும் முன்னிறுத்துகிறது. கதிர் கொட்டும் பொங்கலாகத் தொடங்கும் இந்த விழா மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும் தருணத்தை கொண்டாடுகிறது. இதனால், இது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உயர்கிறது.

துரதிருஷ்டவசமாக, இன்றைய காலகட்டத்தில் மதம் மற்றும் சமய சாயல்களால் சிலர் இந்த நிகழ்வுகளில் பங்குபெறுவதில்லை. கிறிஸ்தவங்களாகவும், முஸ்லீம்களாகவும் உள்ள சில தமிழர்கள், இந்நிகழ்வுகளை தங்கள் மத சிந்தனைகளுக்குப் புறம்பாகக் கருதி விலகிக்கொள்ள முயலுகிறார்கள். இது தமிழர் ஒருமைப்பாட்டுக்கு இடையூறாகும் என்பது வரலாற்றுப் பிழையாகப் பதிவாகி வருகிறது.

இவற்றை தாண்டி, நம் தமிழர் திருநாளை தமிழரின் அடையாளமாக கொண்டாட வேண்டும் என்பதே உண்மையான தமிழர்களின் கடமை. தமிழர் திருநாளான பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு எந்த ஒரு மத சாயமும் இல்லாத நிகழ்வுகள். இவை தமிழர்கள் அனைவருக்கும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டிய பொன்னான வாய்ப்பாக அமைவது குறிப்பிடத்தக்கது.
தமிழர் ஒருமைப்பாட்டின் தேவை
தமிழர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை மதிக்க வேண்டும். மதத்தின் பெயரால் நிகழ்வுகளை புறக்கணிப்பது, தமிழர் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கிறது. நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்வைத்து, ஒற்றுமையாக இந்த திருநாள்களை கொண்டாடுவதன் மூலம், நம் பாரம்பரியத்தை மறவாமல், திருவிழாவின் நலத்தை நம் தலைமுறைறையினருக்கு அளிக்க முடியும்.

தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் உயிரோடு வைத்திருக்க, நாம் அனைவரும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு திருவிழாக்களை மதம் மற்றும் கோட்பாடு சாராமல் கொண்டாட வேண்டும். இது நம் தமிழரின் கலாசாரப் பெருமையை உலகுக்கு உணர்த்தும் ஓர் அரிய வாய்ப்பாகும் என்பதை மலேசியத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் கொண்டாடுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகக் கருதப்படுகிறது. இதனை உலகில் தோன்றிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் உட்பட தமிழர் தலைவர்கள் மிகச் சிறப்பாக முன்னெடுத்து சென்றுள்ளனர். வாழ்கத் தமிழ் வளர்கத் தமிழர்ப் பண்பாடு , வாழ்க பகுத்தறிவுச் சிந்தனை.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை