Thursday, March 19, 2026

மஇகா மாளிகையில் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகம்! -லைலத்துல் கத்ர் இரவில் டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம்!

தேசிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளான அம்னோ, மசீச ஆகியவற்றைவிட தலைநகரில் முதல் முதலாக கட்சிக்கான தேசிய தலைமையாக கட்டடத்தை எழுப்பிய முதல் கட்சி மஇகா என்று அதன் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் தெரிவித்தார்.

1974 -இல் மஇகாவின் அண்ணாளைய தேசிய தலைவரான தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைமையில் இந்தக் கட்டடம் எழுப்பப்பட்ட பொழுது இஸ்லாமிய பெருமக்களும் வர்த்தகர்களும் அளித்த கொடையில் அதிகம் என்று சொன்ன இலக்கிய செல்வர் மு சரவணன், தான்ஸ்ரீஜ விக்னேஸ்வரன் தலைவரான பிறகு ஆண்டு தோறும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்துவது ஒரு வழக்கமாகவே மாய்க்கவின் பாரம்பரியமாகவே உருவாக்கி விட்டார் என்று பெருமையாக குறிப்பிட்டார்.

ஹிஜ்ரி ஆண்டு 1447-இல் நிகழும் நோன்பு மாதத்தில் இஸ்லாமிய பெருமக்கள் மிக பெருமையாகக் கருதும் லைலத்துல் கத்ர் இரவான (27-ஆம் நாள் இரவு) இன்று, மஇகா தேசிய தலைமையகத்து நேதாஜி அரங்கத்தில் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மஇகா தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன், தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ எஸ். அசோகன் டத்தோ த முருகையா, தேசிய ஊடக பிரிவு தலைவர் எல் சிவசுப்பிரமணியன் மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ இராமலிங்கம், இளைய மாநிலத் தலைவர் டத்தோ சைமன் ராஜா, இளைஞர் பிரிவுத் தலைவர் சேர்ந்த அரவிந் கிருஷ்ணன், சதாசிவம் உள்ளிட்ட கட்சி பெருமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஊடக வட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மஇகா செனட்டரும் மாஹ்சா பல்கலைக்கழக வேந்தருமான டான்ஸ்ரீ ஹனீஃபா, டே ப் கல்லூரி நிர்வாகி டத்தோ இப்ராகிம் ஷா, மஇகா-வின் கல்விக் கரமான எம்.ஐ.இ.டி. தலைமை நிர்வாக அதிகாரி மும்தாஜ் பேகம் ஆகியோருடன் மலேசிய தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையும் வர்த்தக பிரமுகரும் இதே மஇகாவின் பாரம்பரியத்தை கொண்ட தான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபயதுல்லாவின் பெயரனுமான டத்தோ விரா சாகுல் உள்ளிட்ட இஸ்லாமிய பெருமக்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

மார்க்க அறிஞர் கம்பம் பாகவி பீர் முகமது திருக்குர்ஆன் மறைக் கருத்தை எடுத்துச் சொல்லி, துவா ஓதி நோன்பு திறப்பைத் தொடக்கி வைத்தார்.

அவரின் குரலைப் போலவே கருத்தும் இனிமையாக இருந்தது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை