
மலேசியாவில் நோன்புத் திருநாள் நாளை மறுநாள் மார்ச் 21 சனிக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மலேசியாவில் நோன்புத் திருநாள் (ஹரி ராயா ஐதில்பித்ரி) மார்ச் 21, 2026 (சனி) அன்று கொண்டாடப்படும் என ஆட்சியாளரின் முத்திரைக் காப்பாளர் சையது டேனியல் சையத் அகமது, ஆட்சியாளர் மன்றத்தின் சார்பில் சற்று முன்பு அறிவித்தார்.
மலேசியாவில் நோன்புத் திருநாள் நாளை வெள்ளிக்கிழமையா அல்லது நாளை மறுதினமா என்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் இருபத்து ஒன்பது இடங்களில் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது .
ஆனாலும், ஷவ்வால் மாத பிறை காணப்படாததால் நோன்புத் திருநாள் நாளை மறுநாள் மார்ச் 21 ஆம் நாள் சனிக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


