Saturday, April 18, 2026

உலு லங்காட் மாவட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்குதிடல் தடப் போட்டி!

சிலாங்கூர் மாநிலம், உலு லங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான திடல் தடப் போட்டி அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியினை அதிகாரப்படியாக ம.இ.கா. சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ சங்கரராஜ் திறந்து வைத்தார்.

ம.இ.கா. சிலாங்கூர் மாநிலச் செயலாளர் சசிதரன் இந்த விளையாட்டு போட்டியை நிறைவு செய்தார்.

ம.இ.கா சிலாங்கூர் மாநில ஏனைய பொறுப்பாளர்களும் உறுப்பிணர்களும் இதில் கலந்து சிறப்பித்த
இப்போட்டியில், ஏழு தங்கப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த முதல் நிலை வெற்றியாளராகச் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியும், காஜாங் தமிழ்ப்பள்ளி ஆறு தங்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தையும், ஐந்து தங்கங்களுடன் மூன்றாம் இடத்தை அம்பாங் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின.

இப்போட்டியில் 8 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 283 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி, உலு லங்காட் மாவட்டக் கல்வி இலாகா மற்றும் உலு லங்காட் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. இப்போட்டிக்கு ம.இ.கா,உலு லங்காட் தொகுதி ஆதரவு வழங்கியது.
வருகின்ற ஏப்ரல் மாதம், நடைப்பெறவிருக்கும் மாவட்ட அளவிலான திடல் தடப் போட்டிக்கான (MSSDHL) ஓட்டக்காரர்களை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு, பயிற்சி அளிப்பதற்கும் திடல் தடப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கும் இப்போட்டி உறுதுணையாக இருந்தது.

இப்போட்டியின் ஆலோசகராக பணியாற்றிய க.ராசசெல்வன் மற்றும் செயலவை உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் குகனேஸ் கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் கு.நெடுஞ்செழியன் ஆகியோர் .தெரிவித்தனர்.

ஒத்துழைப்பு வழங்கி உதவிக்கரமும் நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மேலும் தெரிவித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை