
அமெரிக்க அரசியலில் அதிபர் ட்ரம்புக்கான ஆதரவு குறைந்துவரும் அதேவேளை, அவர் தலைமை வகிக்கும் குடியரசுக் கட்சிக்கு இடைத்தேர்தல் சவாலும் எழுந்துள்ளது.
நிகழ்கால அமெரிக்க அரசியல் சூழலில்
2026 இடைத் தேர்தல்களை முன்னிட்டு அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீதான மக்களின் ஆதரவு குறைந்து வருவதாக பல்வேறு கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.
2024 தேர்தலில் அவரை உறுதியாக ஆதரித்த ஹிஸ்பானிக் சமூகத்தினர், இளைஞர்கள், கட்சிசாரா வாக்காளர்கள் ஆகியோர் தற்போது விரக்தி யடைந்துள்ள-னர்.
பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ள எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பு குறைவு போன்றவற்றால் மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்த அதிருப்தி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நேரடி வெறுப்பாக உருமாறி உள்ளது.
வளைகுடா மண்டலத்தில் தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக நடத்து ம் போரைத்தவிர, ஈரான், ரஷ்யா, சீனா தொடர்பான ட்ரம்ப் அரசின் அயல் உறவு கொள்கை- நடவடிக்கைகள் குறித்தும் வாக்காளர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.

செய்யறிவு-AI தொழில்நுட்ப நிறுவனங்க-ளின் செல்வாக்கு, குடியேற்றக் கொள்கை-கள், கல்வி சீர்திருத்தங்கள் போன்ற பிரச்சி-னைகளில் ட்ரம்ப்பின் தன்மூப்பான நிலைப் பாடு, மக்கள் மனதில் குழப்பத்தையும் எதிர்கால நிச்சயமின்மையையும் ஏற்படுத்தி யுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை அல்லது பிரதிநிதிகள் அவையில் (House of Representatives) குடியரசுக் கட்சி தற்போது குறுகிய பெரும்பான்மையுடன்தான் உள்ளது.
சில இடங்களை இழந்தால், பெரும்பான்மை குலைந்து விடும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க ட்ரம்ப் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து, கட்சியின் நிலையைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால், மக்களின் மனநிலை அவருக்கு எதிராக மாறி வருவது கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.

Economist, YouGov போன்ற அமைப்புகளின் கருத்துக் கணிப்புகள், ட்ரம்ப் மீது மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் கட்சி சாராத வாக்காளர்கள், “அமெரிக்காவின் எதிர்காலம் புதிய தலைமுறையின் கையில் இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தில், மாற்றத்தை விரும்புகின்றனர்.
மொத்தத்தில், டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி, பிரதிநிதி அவையில் பெரும்பான்மையை இழக்கக்கூடும்;, ட்ரம்ப் அரசின் கொள்கைகள் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை சந்திக்கக்கூடும்;
அமெரிக்க அரசியல் களம் புதிய தலைமுறையின் குரலால் மாற்றம் அடையக்கூடும் என்ற கருத்தெல்லாம் சமூக வெளியிலும் சமூக வலைதலங்களிலும் அதிகமாக பகிரப்படுகின்றன
மொத்தத்தில்,, அமெரிக்க அரசியலில் ட்ரம்ப் ஆதரவும் அலையும் குறைந்து வருவது, குடியரசுக் கட்சிக்கு இடைத்தேர்தலில் பெரும் சவாலாக மாறியுள்ளது. பொருளாதார சிக்கல்கள், வெளிநாட்டு கொள்கை, சமூக எதிர்பார்ப்புகள் ஆகியவை மக்களின் மன-நிலையை மாற்றி, புதிய அரசியல் மாற்றத்-திற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
அதேவேளை எதிரணியான ஜனநாயக் கட்சியில் ஒரு வலிமையான புகழ்மிக்க தலைவர் இன்றைய சூழலில் இல்லை என்பதால் அது ட்ரம்ப்பிற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது; நாளை அரசியலில் எதுவும் நடக்கலாம்.
ஆனாலும் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆகாது இந்த குறுகிய இனவாத-மதவாத போக்கு.


