
முசோலித் தனத்தை உள்ளூரக் கொண்டி-ருக்கும் ராகுல் காந்தியும் தமிழ் நாட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் வஞ்சக அரசிய-லுக்கு வாழும் உதாரணமாக இருக்கின்றனர்.
ஆரிய குள்ள நரி, தமிழிய துரோகி, துக்ளக் இதழின் அந்நாள் ஆசிரியன் சோ ராமசாமி-யின் அரிசியல் கருத்து யாவும் ஒரு சூது மதியாளனின் வெளிப்பாடாக இருந்தாலும், ஒருமுறை சொன்ன கருத்து இன்றளவும் எனக்கு பிடிக்கும்; அது, காஷ்மீர் சிக்கல் தொடர்புடையது.
குழந்தை பிறக்கும்பொழுதே வாலுடன் பிறந்த கதையாக, இந்தியா என்னும் செயற்கை நாடு உருவானபொழுதே ஒட்டிவந்த சிக்கல் காஷ்மீரத்து சிக்கல் என்றும் இதற்கு நேருதான் காரணம் என்றும் ஒருமுறை சொல்லி இருந்தார்.
இந்தக் கருத்தில் முதலின் சொன்னது உண்மை; பின்னது, இந்தியாவின் முதல் பிரதமர் நேருமீது காழ்ப்புணர்வைக் கொட்டிய சோ’வின் சனாதன இழிபுத்தியின் வெளிப்பாடு.
மொத்தத்தில், சுதந்திர இந்தியா உருவான நாளிலேயே, வாலுடன் பிறந்த குழந்தைப்-போல இன்றுவரை தீர்க்கப்படாத காஷ்-மீரத்து சிக்கலை ஒட்டிக் கொண்டுதான் தோன்றியது.
ஏறக்குறைய அதைப்போல, 2026 மேத் திங்கள் 04-ஆம் நாள் தமிழ் நாட்டில் உருவாக இருக்கின்ற புதிய சட்டமன்றம் (தமிழ் நாடு), அடுத்த 6 மாதங்களுக்குள் ஓர் இடைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்பது, இன்னும் வேட்புமனுத் தாக்கலே நிறைவடையாத நிலையில், இன்றே உறுதியினும் உறுதியாக இருக்கிறது.
திருமாவளவனை அதிகார ஆசை ஆட்டிப் படைக்கிறது. 1967 மே 05-ஆம் நாள்வரை தான்தான் திமுக-வின் மகுடம் சூடாத மன்னன்; பேரறிஞப் பெருந்தகை அண்ணா-வைவிட மக்களைத் திரட்டுவதிலும் விசில் சத்தத்திலும் தனக்குத்தான் முதலிடம் என்ற இறுமாப்பில் இருந்த எம்ஜிஆருக்கு, அடுத்த நாள் திமுக ஆட்சி அமைந்தது முதல் அமைச்சர் பெருமக்களுக்கு உள்ள அதி-காரம், தன்னிலும் இளப்பமாக இருந்தவர்-கள் எல்லாம் தேசியக் கொடி பறக்கும் வாகனத்தில் பவனி வருவது, அதிகாரக் குவியலில் ஆசனம் இட்டிருப்பது, போலீசார் அணிவகுத்து வனங்குவது இவை யாவும் எம்ஜிஆரின் மனதைக் கீறிவிட்டன; பொறாமைப்பட்ட எம்ஜிஆர் அதிகார நாற்காலிக்கு ஆசைப்பட்டார். அதன் வெளிப்பாடுதான், அதிமுக உதயம்.
எம்ஜிஆருக்கு துணை நின்றவர் இந்திரா காந்தி; திருமாவளவனுக்கு? ஒருவேளை முசோலி சாயல் கொண்ட ராகுலோ?
ஏறக்குறைய எம்ஜிஆரைப் போல, அமைச்சர் பதவி என்னும் வெறி திருமாவளவனின் உச்சி முடியைப் பிடித்து ‘ஆட்டு ஆட்டாய்’ ஆட்டுகிறது.

2026 மேத் திங்கள் 04-ஆம் நாள், திமுக-விற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது; தன் எண்ணப்படி கிடைக்காவிட்டால், இதுவரை மற்ற மாநிலங்களில் எப்படி செய்தோமோ அதைப்போல தமிழ்நாட்டு அதிகார மையத்திலும் கொல்லைப்புற வழியே நுழையலாமா என்பது குறித்து தந்திரமாக செயல்படுவது; அதற்கு ஆதுவாக அந்த நேரத்தில் ஒரு வாரத்திற்கு ஆளுநர் மாளிகையில் இடைக்கால ஆளுநர் இல்லா-மல் பார்த்துக் கொள்வது; ஒருவேளை அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வென்றாலும் மு.க. ஸ்டாலின் உடனே பதவியேற்காதபடி 2017 பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் சசிகலாவைப் போல தவிக்க விடுவது என்பதுதான் பாஜக-வின் இன்றைய குயுக்தி புத்தியாக இருக்கிறது.
உண்மையில், திமுகவிற்கு தனிப் பெரும்-பான்மை கிடைக்கக்கூடாதென்று பாஜக கருதுவதைவிட, ராகுலும் திருமாவளவனும்-தான் அதிமாக ஆசைப்படுகின்றனர்.
அவ்வாறு தனிப்பெரும்பான்மை கிடைக்கா விட்டால், ஸ்டாலினை உளுக்கு உளுக்-கென்று உலுக்கி, ஆட்சியில் பங்குபெறலாம் என்ற நப்பாசையில் வஞ்சக அரசியல்வாதி-யும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை திமுகமீது வஞ்சக பகைகொண்டு இருப்ப-வருமான ராகுல், ‘இகல் வெல்லும் கூகை’-யைப் போல காத்திருக்கிறார்.
2016-இல், ‘நீங்கள் திமுக-வுடன் கூட்டணி அமைத்தால், ஸ்டாலின் முதல்வராகத்தான் அது உதவும்; உங்களின் முதல்வர் இலட்சி-யம் ஈடேறாது; அதனால், எங்களுடன் சேருங்கள்; உங்களை முதல்வர் வேட்பாள-ராக அறிவிக்கிறோம்; தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவா, கலைஞரா அல்லது ஸ்டாலினா என்பதை முடிவு செய்யும் (King maker) நிலைக்கு நாம் உருவாகலாம்; அத-னால், எங்கள் மக்கள் நலக் கூட்டணியில் இணையுங்கள் என்று வைகோ, திமுகமீது எப்போதும் நஞ்சைக் கக்கும் ஜி.ராமகிருஷ்-ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர், தமாகா ஜி.கே.வாசன் ஆகியோருடன் விஜய காந்தின் கையைப் பிடித்து இழுத்து வந்தவர் இதே திருமா-வளவன்தான்.

கடைசியில், குருடும் குடுடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடி குழியில்விழுந்தன என்னும் திருமுறை வரிகளுக்கு ஏற்ப அனைத்து மண்ணைக் கௌவ்வின. மாட்டு சந்தை தரகர் விஜயகாந்தும்(பிரேமலாதா) இந்தக் கும்பலினால் வைப்புத் தொகையைக் கூட பறிகொடுத்தார்.
இந்த அத்தனையும் வெட்கமின்றி, எந்த ஸ்டாலினை 2016-இல் முதல்வராகாமல் தடுத்தனவோ, அதே ஸ்டாலினிடம் இன்று அரசியல் தஞ்சம் அடைந்து கிடைக்கின்றன.
தன் கட்சிக்கு, மாநிலக் கட்சித் தகுதி பெற்றுக் கொடுத்த ஸ்டாலினுக்கு எதிராக இன்று வஞ்சகமாக காய் நகர்த்தும் திருமாவளவன், தன்னுடைய அரசியல் பதவி வேட்கைக்காக-வெறிக்காக, ஜனநாயகத்-தையும் தேர்தல் ஆணையத்தையும் கேளிக் கூத்தாகும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டே, சட்ட மன்றத்திற்குப் போட்டியிடுகிறார்.
திருமாவளவன் காட்டுமன்னார்க் கோயிலில் வெல்வது திண்ணம். ஆனால், அவர், அதே காட்டுமன்னார்க்கோயில் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த ஆறு மாதத்தில் இடைத்தேர்தலுக்கு காரணமாகப் போகி-றாரா அல்லது சிதம்பரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற வழியேற்படுத்தப் போகிறாரா என்பதை மே 04-இல் வெளியாக இருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவும் திருமாவளவனின் குயுக்தி புத்தியும் உறுதி செய்யும்!


