
2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று மார்ச் 31-இல் வெளியான நிலையில், மாணவர்கள் தத்தம் உயர்க்கல்வி தொடர்பில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரத் ஆயத்தமிகி வருகின்றனர்
இந்த முக்கியமான தருணத்தில் இந்திய மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டு மஇகா இளைஞர் பிரிவு சார்பில் நாளை ஏப்ரல் முதல் நாள் முதல் மாநிலந்தோறும் உயர்கல்வி இரட்சிய பயணம் என்ற பெயரில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக இதன் தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டிகா கருத்தரங்கம் தொடர்பில் முதல் நிகழ்ச்சி நாளை ஏப்ரல் முதல் நாள் இரவு 7:00 மணியளவில் மலாக்கா அலோர் காஜா அருள்மிகு சித்தி விநாயகர் பாலசுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
அடுத்ததாக, ஏப்ரல் 4-ஆம் நாள் பகாங் மாநில இந்திய மாணவர்களுக்கான கூட்டம் குவாநதான் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய சமூக மண்டபத்தில் நடைபெறும்.
தொடர்ந்து ஏப்ரல் ஐந்தாம் நாள் கெடா, பேராக் சிலாங்கூர் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இந்திய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி விழிப்புணர்வுக் கருத்தெரும்பு நடைபெற இருக்கிறது என்று இதன் தொடர்பில் இன்று இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சதீஷ்குமார் மேலும் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மேல் விவரத்திற்கு 019-4860087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சதீஷ்குமார் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது கே. லட்சுமணன், கே, சுபாஷ், எம். கிரிதரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.


