Thursday, April 16, 2026

சாதி சங்கங்களை கடுமையாக எதிர்க்கின்றோம்: -தங்க கணேசன்

மலேசியாவில் ஒன்றாக இருக்கின்ற இந்து சமுதாயத்தில் பிரிவினையையும் பேதத்தை-யும் ஏற்படுத்துகின்ற தமிழ்நாட்டு கலாச்சா-ரம் இங்கு தேவையில்லை என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.

ஒரு சில சாதி சங்கங்கள் தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்களாகவும் செயல்படு-கின்ற வேளையில் அதைப் போன்ற கலாச்சாரம் மலேசியாவிற்கு ஒத்துவராது.

நாம் அனைவரும் இந்துக்கள் என்னும் அடிப்படையில் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் வேளையில், தமிழ்நாட்டைப் போல இங்கே-யும் சாதி சங்கங்களை ஏற்படுத்தி இந்து சமுதாயத்தில் பிளவு ஏற்படுவதை வன்மை-யாக கண்டிக்கிறோம் என்று இந்து சங்கத்-தின் அறுபதாம் ஆண்டு விழா இன்று கலா மண்டபத்தில் கொண்டாடிய வேளையில் அதில் தலைமை உரையாற்றிய கணேசன் மேற்கண்டவாறு சாதி அமைப்புகளை எச்சரித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை