Sunday, April 19, 2026

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று பிற்பகலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!-இந்தியர்களே ‘சோகோ’ வர்த்தக வளாகத்திற்கு முன் அணி திரளுங்கள்!!

எரிபொருள் விலை உயர்வுக்கு மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இருந்தாலும் இங்கு இந்தக் காலத்தில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதாகக் கூறி இதன் தொடர்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைநகர் கோலாலம்பூர் துங்கு அப்துல் ரகுமான் சாலை சோகோ வர்த்தக வளாகத்திற்கு முன்பு இன்று ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணி அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ள சுற்றுலா பேருந்து உள்ளிட்ட வர்த்தக வாகன உரிமையாளர்கள், பள்ளிப் பேருந்து நடத்துனர்கள், டிப்பர் லோரி போன்ற மணல் லோரி-குப்பை வாகன ஓட்டுநர்கள் தள்ளுபடி விலையிலான டீசல் கிடைக்காமல் மிகவும் அல்லலுக்கு ஆட்பட்டுள்ளனர். இத்தகைய அவலங்களை மடாணி அரசுக்கு எடுத்துரைக்க இன்றைய பேரணியில் அனைவரும் திரண்டு கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தும்படி அழைக்கப்படுகின்றனர்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை