Wednesday, April 15, 2026

ஏழு வயது உதயகுமார் பயணம் செய்த வாகனம் ஏறி இறங்கி மரணம்!சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மௌனம்- பதுங்கல்!!நியாயமும் நீதியும் அந்தரத்தில்!!!

பள்ளி சென்ற முதலாம் ஆண்டு மாணவனை பள்ளி வேன் இறக்கிவிடும் இடத்திலேயே தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்புவதற்காக காத்திருந்த தந்தை கண் முன்னாலேயே அதே வேன் ஏறி இறங்கி மகன் மரணம் அடைந்த துயரத்திற்கு ஆளான தந்தை ஸ்ரீ தேவனின் நிலை வேறு எவருக்கும் ஏற்படவேக் கூடாது.

உதயகுமாரின் தாய் ரதியும் தந்தையும் வேலைக்கு செல்கின்ற சூழலில், கடந்த மார்ச் 30-ஆம் நாள் பத்துமலை கம்போங் லெட்சுமணாவில் உள்ள ஓர் ஆசிரமத்தில் வழக்கம்போல உதய குமாரை விட்டுவிட்டு பணிக்கு சென்றுள்ளனர்.

உதயகுமாரின் பெற்றோரும் அண்ணனும்.. .

சம்பந்தப்பட்ட உதயகுமார் அதே ஆசிரமத்தில் பாலர் கல்வியை மேற்கொண்ட நிலையில் அந்த ஆசிரமம் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு நன்கு அறிமுகமும் பரிச்சயமும் ஆகி இருக்கிறது.

காலை 11:00 மணியிலிருந்து பகல் 1:00 மணி வரை அந்த ஆசிரமத்தின் பராமரிப்பிலேயே இருந்தபின் பத்து மலை தமிழ்ப் பள்ளியில் இறக்கி விடுவதும் பள்ளி முடிந்து மாலையில் ஏற்றிக்கொண்டு அதே ஆசிரமத்தில் இறக்கி விடுவதும் அன்றாட வழக்கமாக இருந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சம்பவம் நடந்த ஆன்று, பணி முடிந்து மகனை ஏற்றிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக தந்தை காத்திருந்த பொழுது சம்பந்தப்பட்ட வேனில் உதவியாளரும் இல்லை; பிள்ளைகள் இறங்கும்பொழுது அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று ஆசிரமத்தில் விடுவதற்கான பணியாளரும் இல்லை.

இந்த சூழ்நிலையில், ஒரு மாணவி இறங்கி அந்த ஆசிரமத்துக்கு எதிரே உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னால் இறங்கிய உதயகுமார் தந்தையிடம் செல்வதற்காக வேனுக்கு முன்னாள் சாலையை கடக்க முயன்று பொழுது வேன் ஓட்டுனரும் வேகமாக வலப்பக்கம் திரும்பி இருக்கிறார்.

அந்த இமைப்பொழுதில் வேனின் பம்பர் மோதி மாணவன் கீழே விழுந்த நிலையிலும் வேன் வேகமாக வலது பக்கம் திரும்பியதால் வேனின் பின்புற சக்கரம் உதயகுமார் மீது ஏறியபொழுது அதை எதிரே பார்த்துக் கொண்டிருந்த தந்தை கத்தி கதறி இருக்கிறார்.

சம்பந்தப்பட்ட ஓட்டுநர் என்ன ஏது என்று நிதானிக்காமல் மீண்டும் வாகனத்தை பின்னால் எடுத்த பொழுது இன்னொரு முறை சம்பந்தப்பட்ட மாணவனின் இடுப்பில் ஏறி இறங்கி இருக்கிறது.

இரத்த வெள்ளத்தில் மிதந்த மகனை தந்தை தூக்கிக் கொண்டுசெலாயாங் மருத்துவமனைக்கு விரைந்த பொழுது அங்கு உயிர் காக்கும் கருவியின் மூலம் உதயகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றும் பயனில்லாத பொழுது உதயகுமார் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இந்த சிக்கல் கோம்பாக் மாவட்ட தலைமை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது

ஆனால் சம்பந்தப்பட்ட ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரி காவல் பினையில் ஓட்டுனரை விட்டு விட்டார் உரிமம் இல்லாத வாகனத்தையும் விட்டுவிட்டார்.

எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் எதுவுமே தெரியவில்லை இதன் தொடர்பில் இன்று சம்பந்தப்பட்ட உதயகுமாரின் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழக தலைவர் ரமேஷ், “இந்த சிக்கலுக்கு நீதி வேண்டும்; ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்தத் தரப்பில் இருந்தும் எவரும் வரவில்லை! சம்பந்தப்பட்ட ஆசிரமம் சீரமைப்பு பணி நடைபெறுவதாக காரணம் கூறப்பட்டு மூடி கிடக்கிறது;

மொத்தத்தில் பி-40 பிரிவை ச் சேர்ந்த ஏழை குடும்பத்தினரின் இரண்டாவது மகன் அநியாயமாக இறந்த நிலையில் இதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பக்க சார்பின்றி விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட எந்த தரப்பினரையும் விட்டுவிடாமல் முழு விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும் என்று மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சமூக செயல்பாட்டாளருமான எஸ். ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் தொடர்பில் சற்று முன்பு உதயக்குமாரின் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்தது

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை