Sunday, April 19, 2026

கோலாலம்பூரில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 5, 2026 – மலேசியாவில் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் கோலாலம்பூர் துங்கு அப்துல் ரகுமான் சாலை ‘சோகோ’ வர்த்தக வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் PERKASA இயக்கப் பொறுப்பாளர்கள், பாஸ் கட்சி வட்டாரத் தலைவர்கள், மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP) தலைவர் பொன் வேதமூர்த்தியுடன் ஏனைய பொறுப்பாளர்கள், இனம் மொழி கடந்து பல்வேறு தரப்பினரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகளைச் சார்ந்தோர் என அதிகமானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். கடந்த வாரம் (ஏப்ரல் 2–8, 2026) தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு வெ.6.02 ஆக உயர்ந்தது.

அதே சமயம் ரோன்97இன் விலை வெ.4.95 ஆகக் குறைந்திருந்தாலும், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மலேசியாவில் எரிபொருள் விலை சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது.

அரசு, BUDI95 திட்டத்தின் கீழ் ரோன்95 விலையை வெ.1.99 எனவும் கிழக்கு மலேசியாவில் டீசல் விலையை வெ.2.15 எனவும் தக்க வைத்திருந்தாலும், உதவித்தொகை இல்லாத எரிபொருள் விலைகள் சாதனை உயர்வை எட்டியுள்ளன.

இந்த சூழ்நிலையில், மக்கள் வாழ்வாதார சுமையை குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு இடையில், அரச அதிகாரிகள், சோகோ பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை