
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மலேசிய சோசலிசக் கட்சி (PSM), கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்க் கூட்டத்தை நடத்தியது. இதில் கட்சித் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் காந்தீபன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
ஒற்றுமை அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ‘Rakan KKM’ திட்டம் வசதி படைத்தவர்களுக்கு சிகிச்சை எளிதில் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப் படுகிறது; நலிந்த பிரிவை சேர்ந்த ஏழை மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை.
ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு ஏறக்குறைய 2.2% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுகிறது. குறைந்தபட்சம் 5% வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் சிக்கல், புதிய மருத்துவ கருவிகள் வாங்குவதில் தடங்கல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்றால் ஆண்டு தோறும் சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஓதுக்க வேண்டும்.

புதிய மருத்துவமனைகள் கட்டுவதற்குப் பதிலாக, தற்பொழுது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குகின்ற அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தற்போது நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்கவும் சிகிச்சைக்கான சந்திப்புறுதியைப் பெறவும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் சுகாதாரத் துறை சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒற்றுமை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் பிஎஸ்எம் வலியுறுத்தி, பொதுமக்களின் சுகாதார உரிமையை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.


